'லிப்ட்'டில் சிக்கிய வாலிபர் மீட்ட தீயணைப்பு வீரர்கள்
'லிப்ட்'டில் சிக்கிய வாலிபர் மீட்ட தீயணைப்பு வீரர்கள்
ADDED : செப் 01, 2026 03:12 AM
தட்சிண கன்னடா: மங்களூரில் அடுக்குமாடி குடியிருப்பில் நள்ளிரவில் லிப்டில் சிக்கிய நபரை, தீயணைப்பு படையினர் மீட்டனர்.
தட்சிண கன்னடா மாவட்டம், மங்களூரு தாலுகாவின் பாண்டேஸ்வரத்தில் மிசார் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்கு, அசாம் மாநிலத்தை சேர்ந்த கேசவ், 33, வசித்து வருகிறார்.
நேற்று அதிகாலை 2:00 மணியளவில் கீழே இருந்து மாடிக்கு செல்ல, லிப்டில் ஏறினார். லிப்டில் ஏறிய பின், தான் வசிக்கும் தளத்துக்கு செல்ல பொத்தானை அழுத்தினார். ஆனால், லிப்ட் திடீரென பழுதானது. கதவை திறக்க முயற்சித்தார்; முடியவில்லை.
உடனடியாக தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த அவர்கள், லிப்ட் பழைய மாடல் என்பதால், சாவியை கொண்டு கதவை திறக்க முடியவில்லை. பின், ஹைட்ராலிக் கருவியை பயன்படுத்தி கதவை திறந்து, கேசவை மீட்டனர்.
இதனால் அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
