தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ பெங்களூரில் இரண்டு அமைச்சர்கள் திடீர் ஆய்வு

 பெங்களூரில் இரண்டு அமைச்சர்கள் திடீர் ஆய்வு

 பெங்களூரில் இரண்டு அமைச்சர்கள் திடீர் ஆய்வு


ADDED : செப் 01, 2026 03:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 01, 2026 03:13 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: பெங்களூரு மல்லசந்திரா பகுதியில் வீடு, வீடாக சென்று குப்பை சேகரிக்கப்படுகிறதா என, பெங்களூரு நகர வளர்ச்சி துறை அமைச்சர் கிருஷ்ண பைரே கவுடா நேற்று திடீர் ஆய்வு செய்தார்.

அவர் கூறியதாவது:

விலங்குகளுக்கு எட்டாத வகையில் மக்கும் மற்றும் மக்கா குப்பை என தனித்தனியே பிரித்து வைக்க வேண்டும்.

கண்ட இடத்தில் குப்பை போடக்கூடாது. துப்புரவு பணியாளர்கள் முகக்கவசம், கையுறை ஆகியவற்றை அணிந்து தான், பணியில் ஈடுபட வேண்டும்.

குப்பை சேகரிக்கும் பணிகள் தினமும் நடக்கிறதா என்பதை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். வீட்டு வாசலில் குப்பை கிடந்தால் வீட்டின் உரிமையாளரே பொறுப்பு. தங்கள் சுற்றுப்புறத்தை துாய்மையாக வைத்திருங்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதுபோல, பெங்களூரு மெஜஸ்டிக் பஸ் நிலையத்தில் போக்குவரத்து அமைச்சர் பைரதி சுரேஷ் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். பயணியரிடம் குறைகளை கேட்டறிந்தார்.

'மாணவர்களுக்கு பஸ் பாஸ் வழங்குவதில் ஏற்படும் தாமதத்தை விரைவில் சரிசெய்ய வேண்டும். நம்ம கிளினிக்கில் மருத்துவர் இல்லாதது அதிர்ச்சி அளிக்கிறது. உடனடியாக மருத்துவரை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, அதிகாரிகளுக்கு அமைச்சர் பைரதி சுரேஷ் உத்தரவிட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us