ADDED : ஜூலை 15, 2026 11:47 PM
தங்கவயல்: அம்பேத்கர் அறிவு மையம் கட்டுமான பணிகளை, தங்கவயல் காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரூபகலா அதிகாரிகளுடன் நேற்று ஆய்வு செய்தார்.
தங்கவயலுக்கு அம்பேத்கர் வருகை தந்ததை நினைவுகூரும் வகையில், கர்நாடக அரசு, 5 கோடி ரூபாய் நிதியுதவியில் அம்பேத்கர் நினைவிடம், அறிவு மையம், ஆராய்ச்சி மையம் அமைக்கும் பணிகள் தங்கவயல் உரிகம் பகுதியில் நடைபெற்று வருகின்றன.
இதை தங்கவயல் காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரூபகலா நேற்று அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்தார். கட்டுமான பணிகள் தரமானதாக இருக்க வேண்டும் என பொறியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, அதன் அருகில், 100 ஏக்கரில் அமையும் இந்திய ரிசர்வ் போலீஸ் பயிற்சி மையம் அமையும் திட்ட பணிகள் குறித்தும் அதிகாரிகளுடன் விபரம் கேட்டறிந்தார்.
இதன் கட்டுமான பணிகளையும் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க வேண்டும் என்றும் கேட்டு கொண்டார்.
