தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ அடுக்குமாடி சங்க பிரதிநிதிகளுடன் முதல்வர் சிவகுமார் ஆலோசனை

 அடுக்குமாடி சங்க பிரதிநிதிகளுடன் முதல்வர் சிவகுமார் ஆலோசனை

 அடுக்குமாடி சங்க பிரதிநிதிகளுடன் முதல்வர் சிவகுமார் ஆலோசனை


ADDED : ஜூலை 15, 2026 11:46 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 15, 2026 11:46 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: அடுக்கு மாடி குடியிருப்புகள் சங்கங்களின் பிரதிநிதிகளுடன், முதல்வர் சிவகுமார் நேற்று ஆலோசனை நடத்தினார்.

பெங்களூரில் அடுக்குமாடி குடியிருப்புகளின் நிர்வகிப்பு குறித்து, சங்கங்களின் பிரதிநிதிகளுடன், முதல்வர் சிவகுமார் ஆலோசனை நடத்தினார்.

இதில் முதல்வர் பேசியதாவது:

சொத்துகள் வாங்கும் போது, அதன் சாதக, பாதகங்கள் குறித்து உரிமையாளர்களே பார்த்து கொள்ள வேண்டும்.

சொத்துகளின் பதிவு, ஒப்பந்தம் உட்பட, பல விஷயங்களில் ஏற்படும் பிரச்னைகள் பற்றி, அரசுக்கும் தெரியும்.

மக்கள் கஷ்டப்பட்டு வாங்கும் சொத்துகளை, எந்த பிரச்னையும் இல்லாமல் அவர்கள் அனுபவிக்க வேண்டும் என்பது, அரசின் குறிக்கோளாகும்.

அடுக்குமாடி குடியிருப்புகளில் குடிநீர் வசதி, கழிவு நீர் சுத்திகரிப்பு என, அனைத்து மேம்பாடுகளையும் அரசு செய்துள்ளது. நிலத்தடி நீர் மட்டத்தை அதிகரித்துள்ளது. காவிரி ஐந்தாம் கட்டங்கள் மூலமாக, குடிநீர் வசதி செய்யப்படுகிறது.

பெங்களூரில் 1.35 கோடி வாகனங்கள் உள்ளன. பள்ளங்களை மூடுவதற்காகவே, 4,000 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. ஏழைகளும் வீடு கட்ட, தேவையான வசதி செய்ய, அரசு தயாராக உள்ளது.

பெங்களூரில் மிகவும் உயரமான கட்டடங்களை, கவனத்தில் கொண்டு. சாலைகளை விஸ்தரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 132 கி.மீ., தொலைவில் பெங்களூரு பிசினஸ் காரிடார் அமைக்கப்படுகிறது.

நாட்டின் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிட்டால், நிலம் கையகப்படுத்துவதற்கு விவசாயிகளுக்கு, கர்நாடகாவில் அதிகமான நிவாரணம் வழங்கப்படுகிறது.

சுவிட்சர்லாந்துக்கு சென்றிருந்த போது, அங்குள்ள முதலீட்டாளர்கள், பெங்களூரில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டினர்.

பெங்களூரில் இரண்டாவது விமான நிலையம் வரவுள்ளதால், முதலீட்டாளர்களுக்கு வசதியாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us