/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
அம்பேத்கர் நுாலகம் படிப்பகம் திறப்பு
/
அம்பேத்கர் நுாலகம் படிப்பகம் திறப்பு
ADDED : ஏப் 19, 2025 05:31 AM
தங்கவயல்: தங்கவயல் மாரிகுப்பம் ராஜர்ஸ்கேம்ப் ஆஷ்ரியா குடியிருப்பு பகுதியில் அம்பேத்கர் நுாலகம், படிப்பகம் திறப்பு விழா நேற்று நடந்தது.
விழாவுக்கு புஷ்ப பிரியா தலைமை வகித்தார். நுாலகத்தை வக்கீல் ஜோதிபாசு திறந்து வைத்தார். பெமல் தொழிற்சாலையின் அதிகாரி திருமுருகன், முன்னாள் ஓய்வு பெற்ற பெமல் தொழிற்சாலையின் துணை பொதுமேலாளர் பிரதாப் குமார், ஒயிட் பீல்டு மோசஸ் தேவராஜ், சித்துார் பாலகிருஷ்ணன், முன்னாள் பெமல் தொழிற்சங்க பொதுச் செயலர் ஏ.ஜெயசீலன், ஆர்மி முருகன், குப்புசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.
'புத்தகம், நாளிதழ்கள் வாசிப்பது வெறும் அறிவு வளர்ச்சிக்கு மட்டுமல்ல. சமுதாய மறுமலர்ச்சிக்கு விதையாகும். மாணவர்கள் கல்வி ஒன்று மட்டும் தான் வாழ்க்கை தரத்தை உயர்த்தும். எனவே நேரத்தை வீணாக்காமல் நன்றாக படியுங்கள்' என, பலரும் அறிவுரை வழங்கினர்.

