தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/குவாரியில் நண்பர்களுடன் குளித்த ஆந்திர வாலிபர் உயிரிழப்பு?

குவாரியில் நண்பர்களுடன் குளித்த ஆந்திர வாலிபர் உயிரிழப்பு?

குவாரியில் நண்பர்களுடன் குளித்த ஆந்திர வாலிபர் உயிரிழப்பு?


UPDATED : அக் 04, 2026 12:00 AM

ADDED : அக் 03, 2026 08:04 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 04, 2026 12:00 AM ADDED : அக் 03, 2026 08:04 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஜிகனி: கல் குவாரியில், 60 அடி ஆழம் கொண்ட தேங்கிய நீரில், நண்பர்களுடன் குளிக்க சென்ற ஆந்திராவை சேர்ந்த மென்பொறியாளர், நீரில் மூழ்கி மாயமானார். இரு நாட்கள் தேடியும் உடல் கிடைக்காததால், அவர் உயிரிழந்திருக்கலாம் என, போலீசார் சந்தேகிக்கின்றனர்.

ஆந்திர மாநிலம், விஜயவாடாவை சேர்ந்த மென்பொறியாளர் வினய், 30. இவர், பெங்களூரு ஹலசூரு பகுதியில் வாடகை வீட்டில் வசித்தார். இவர், தன் நண்பர்களுடன், மலையேற்றம் செய்ய முடிவு செய்தார்.

பெங்களூரு, ஜிகனி பகுதியின் அரளிகட்டே பிரதான சாலைக்கு அருகிலுள்ள கல் குவாரியில், நேற்று முன்தினம் மலையேற்றம் செய்ய சென்றார். இவருடன், நண்பர்கள் ஏழு பேரும் உடன் சென்றிருந்தனர்.

கல் குவாரியில் உள்ள 60 அடி தேங்கிய நீரில், அனைவரும் குளித்தனர். அப்போது, வினய் திடீரென நீருக்குள் மூழ்கி மாயமானார். அவரை மற்றவர்கள் தேடினர். அவர் கிடைக்காததால், ஜிகனி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து, நேற்று முன்தினம் மாலை 5:30 மணிக்கு சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வீரர்களுடன் வந்த போலீசார், தேடுதல் வேட்டையை துவங்கினர். நேற்று முன்தினம் இரவு 7:30 மணி வரை தேடிய போதும், அவர் கிடைக்கவில்லை.

இதனால், தேடுதல் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. மீண்டும் நேற்று காலை 7:30 மணிக்கு துவங்கிய தேடுதல் பணி, நேற்று மாலை வரை தொடர்ந்தது. இருப்பினும், அவரது உடலை கண்டறிய முடியவில்லை. இதனால், அவர் உயிரிழந்திருக்கலாம் என போலீசார் சந்தேகம் தெரிவித்து உள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us