தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/'நைஸ்' திட்ட முறைகேடுக்கு சட்டத்தின் மூலம் பதில்: முதல்வர் சிவகுமார் திட்டவட்டம்

'நைஸ்' திட்ட முறைகேடுக்கு சட்டத்தின் மூலம் பதில்: முதல்வர் சிவகுமார் திட்டவட்டம்

'நைஸ்' திட்ட முறைகேடுக்கு சட்டத்தின் மூலம் பதில்: முதல்வர் சிவகுமார் திட்டவட்டம்


UPDATED : அக் 04, 2026 02:53 AM

ADDED : அக் 03, 2026 08:04 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 04, 2026 02:53 AM ADDED : அக் 03, 2026 08:04 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மைசூரு: ''நைஸ் திட்ட முறைகேடு குறித்து யார் என்ன சொன்னாலும், இந்நாட்டில் அனைத்திற்கும் சட்டம் உண்டு. இதில் யார் செய்தது சரி, யார் செய்தது தவறு என்பதற்கு சட்டம் மூலமே பதிலளிப்பேன்,'' என, முதல்வர் சிவகுமார் தெரிவித்தார்.

மைசூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:

'நைஸ்' முறைகேடு தொடர்பாக மத்திய அமைச்சர் குமாரசாமி முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க போவதில்லை. சட்டத்தின் மூலமே பதிலளிப்பேன். இவ்விவகாரம் தொடர்பாக தற்போது பதிலளிக்க மாட்டேன்.

எஸ்.ஐ.ஆர்., குழப்பம் குறித்து, மாநில அரசு சார்பில் தனி விசாரணை எதுவும் நடக்கவில்லை. தேர்தல் ஆணையமே விசாரிக்கும். படிவம் 7 எங்கு அச்சிடப்பட்டது; அது எப்படி பா.ஜ.,வுக்கு சென்றது என்பன குறித்து அனைத்து விபரங்களும் வெளிவரும்.

இவ்விஷயத்தில், மத்திய தேர்தல் ஆணையம் உண்மையை கண்டறிந்துள்ளது. அவர்கள் என்ன நடவடிக்கை எடுக்க போகின்றனர் என்று பார்ப்போம். அதன் பின் நாங்கள் முடிவெடுப்போம்.

வழக்கு பதிவு



நாங்கள், மாநில தலைமை தேர்தல் ஆணையம் அலுவலகம் முன் தர்ணாவில் ஈடுபடவில்லை; எந்த சட்டத்தையும் மீறவில்லை. நாங்கள் சட்டப்படி தான் ஆணையரின் கவனத்துக்கு பிரச்னையை கொண்டு சென்றோம்.

பிரச்னையை பற்றி விவாதிக்க அவகாசம் கேட்டிருந்தோம். அதற்காக அங்கு அமர்ந்தோம். ஆனால், அது தர்ணா போராட்டம் அல்ல. இறுதியாக, ஒரு தீர்வு காணப்பட்டு உள்ளது.

மக்கள் பிரதிநிதிகளாகிய நாங்கள், ஆணையர் முன் பிரச்னையை தெரிவித்துள்ளோம். நான் தவறு செய்திருந்தால் என் மீது வழக்கு பதிவு செய்யட்டும்.

ஆனால், மாநிலத்தில் உள்ள பா.ஜ.,வினர், அக்கட்சி மேலிடத்தின் அழுத்தத்தால் அறிக்கை வெளியிட்டு வருகின்றனர். சட்டம் அனைவருக்கும் ஒன்று தான். நான் அமைதியை குலைத்திருந்தாலோ, சட்டத்தை மீறியிருந்தாலோ, வழக்கு பதிவு செய்யுங்கள்.

தசரா ஜம்பு சவாரி



இம்முறை தசரா ஜம்பு சவாரிக்கு, மற்ற மாநிலங்களின் புகைப்படங்களை அனுப்பும்படி கோரிக்கை விடுத்து உள்ளோம். விரைவில் முடிவு செய்யப்படும். தசரா ஜம்பு சவாரிக்கு, மற்ற மாநில முதல்வர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளோம். இருப்பினும், யார் வருவர் என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

நம் மாநிலத்தின் தண்ணீரும், காய்கறிகளும் மற்ற மாநிலங்களுக்கு செல்கின்றன. நமது கலைகள் வெளிநாடு செல்கின்றன. அதுபோல, தசரா பண்டிகையில், அனைத்து கலைகளையும் காட்சிப்படுத்த ஒரு முயற்சி மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

ஜம்பு சவாரி ஊர்வலத்தில் பங்கேற்கும்படி, சினிமா துறையினரை கேட்டு கொண்டுள்ளேன். விமான சாகச நிகழ்ச்சிக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளோம். இம்முறை ஜம்பு சவாரி ஊர்வலம் புதுமையானதாக இருக்க வேண்டும் என்பதே எங்களின் விருப்பம்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us