/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
அங்காள பரமேஸ்வரி கோவில் 64வது ஆண்டு நவராத்திரி விழா
/
அங்காள பரமேஸ்வரி கோவில் 64வது ஆண்டு நவராத்திரி விழா
அங்காள பரமேஸ்வரி கோவில் 64வது ஆண்டு நவராத்திரி விழா
அங்காள பரமேஸ்வரி கோவில் 64வது ஆண்டு நவராத்திரி விழா
ADDED : செப் 20, 2025 11:07 PM

சிவாஜிநகர்: பெங்களூரு, சிவாஜிநகர் அங்காள பரமேஸ்வரி கோவிலின் 64வது ஆண்டு நவராத்திரி மஹோத்சவம் 23ம் தேதி துவங்கி அடுத்த மாதம் 2ம் தேதி வரை நடக்கிறது.
பெங்களூரு, சிவாஜிநகர் ஸ்ரீராமுலா சன்னிதி தெருவில், பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி கோவில் உள்ளது. இக்கோவிலில் 64வது ஆண்டு நவராத்திரி மஹோத்சவம் 23ம் தேதி துவங்கி, அடுத்த மாதம் 2ம் தேதி வரை நடக்கிறது.
இன்று மஹாளய அமாவாசையை முன்னிட்டு, அம்மனுக்கு வெள்ளி கவச மலர் அலங்காரம் செய்யப்படுகிறது.
அதிகாலையில் 4:30 மணிக்கு கோமாதா பூஜை; அதிகாலை 5:00 மணிக்கு மஹா அபிஷேகம்; காலை 7:00 மணிக்கு மலர் அலங்காரம்; 8:00 மணிக்கு மஹா மங்களாரத்தி; 9:30 மணிக்கு சிவப்பு மிளகாய் சத்ருனாச ஹோமம்; 10:30 மணிக்கு ஊஞ்சல் சேவா; 11:00 மணிக்கு அர்ச்சனை; 11:30 மணிக்கு மஹா மங்களாரத்தி; 11:45 மணிக்கு பிரசாத விநியோகம்; மதியம் 12:00 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.
வரும் 23ம் தேதி மஞ்சள்; 24ம் தேதி சாரதாம்பா; 25ம் தேதி கருமாரியம்மன்; 26ம் தேதி அன்னபூரணேஸ்வரி; 27ம் தேதி ராஜராஜேஸ்வரி; 28ம் தேதி காமாட்சி; 29ம் தேதி துர்கா பரமேஸ்வரி; 30ம் தேதி சிவலிங்கம்; 1ம் தேதி மஹாலட்சுமி; 2ம் தேதி சரஸ்வதி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அங்காள பரமேஸ்வரி அம்மன் காட்சி அளிக்க உள்ளார்.
தினமும் காலை 10:30 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகம்; மாலை 6:30 மணிக்கு அலங்காரத்தில் காட்சி தருவார். 2ம் தேதி உற்சவ மூர்த்தி சுவர்ண அலங்காரத்தில் காட்சி தருகிறார். இரவு 7:15 மணிக்கு ஜம்பு சவாரி நடக்கிறது.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் தலைவர் எஸ்.எம்.வேலு, கோவில் நிர்வாக உறுப்பினர்கள் செய்துள்ளனர்.