/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சுகாஸ் ஷெட்டி கொலை மேலும் ஒருவர் கைது
/
சுகாஸ் ஷெட்டி கொலை மேலும் ஒருவர் கைது
ADDED : ஜூன் 04, 2025 11:18 PM
மங்களூரு:பஜ்ரங் தள் தொண்டரான சுகாஸ் ஷெட்டி கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தட்சிண கன்னடாவின் பன்ட்வால் புலிமதவு கிராமத்தின் சுகாஸ் ஷெட்டி, 33, பஜ்ரங் தள் தொண்டர். கடந்த மாதம் 1ம் தேதி இரவு மங்களூரு கின்னிபதவில் படுகொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கை விசாரிக்கும் பஜ்பே போலீசார், கொலை நடந்த இரண்டு நாட்களில் 8 பேரை கைது செய்தனர். 15ம் தேதி மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், இந்த வழக்கில் பஜ்பே சாந்திகுட்டே பகுதியில் வசிக்கும் அப்துல் ரசாக், 59, என்பவருக்கும் தொடர்பு இருப்பது, விசாரணையில் தெரிந்தது. நேற்று முன்தினம் இரவு அவர் கைது செய்யப்பட்டார்.
சுகாஸ் ஷெட்டி கொலை செய்வதற்கு, அப்துல் ரசாக் வீட்டில் வைத்து தான் திட்டம் தீட்டப்பட்டு உள்ளது.
கொலை செய்த பின் கொலையாளிகள் முகமது முசாமில், நவுசாத் ஆகியோருக்கு அப்துல் ரசாக் அடைக்கலம் கொடுத்ததும் போலீசாருக்கு தெரிய வந்தது.
இந்த வழக்கில் இதுவரை 12 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். மேலும் சிலரை போலீசார் தேடிவருகின்றனர்.