/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சாப்பிடும்போது தகராறு: கையால் குத்தியதில் வாலிபர் பலி
/
சாப்பிடும்போது தகராறு: கையால் குத்தியதில் வாலிபர் பலி
சாப்பிடும்போது தகராறு: கையால் குத்தியதில் வாலிபர் பலி
சாப்பிடும்போது தகராறு: கையால் குத்தியதில் வாலிபர் பலி
ADDED : செப் 15, 2025 04:20 AM

புட்டேனஹள்ளி: பானிபூரி சாப்பிடும்போது ஏற்பட்ட தகராறில், நண்பரால் கழுத்தில் ஓங்கி குத்தப்பட்ட பீகார் வாலிபர் உயிரிழந்தார்.
பீஹார் மாநிலத்தை சேர்ந்தவர்கள் பீம்குமார், 25, சல்மான், 24; நண்பர்கள். இவர்கள் உட்பட வடமாநில வாலிபர்கள் சிலர், பெங்களூரு புட்டேனஹள்ளி அரகெரேயில் தங்கி இருந்து, கட்டட வேலை செய்தனர்.
கடந்த 10ம் தேதி பீம்குமாரும், சல்மானும் பானிபூரி சாப்பிட் டனர். அப்போ து அவர்களுக்குள் ஏதோ விஷயத்திற்காக வாய் தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.
கோபம் அடைந்த சல்மான், பீம்குமாரின் கழுத்தில், தன் கையால் ஓங்கி குத்தினார். நிலைகுலைந்த பீம்குமாரும் மயக்கம் போட்டு விழுந்தார். அவரது முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்பினர்.
பின், சல்மானும், பீம்குமாரும் சமாதானம் அடைந்து வீட்டிற்கு சென்று விட்டனர். கடந்த மூன்று நாட்களாக பீம்குமாருக்கு கழுத்தில் வலி இருந்து உள்ளது. ஆனால், அவர் மருத்துவமனைக்கு செல்லவில்லை.
நேற்று முன்தினம் இரவு உணவு சாப்பிட்டு துாங்கியவர் நேற்று காலை எழுந்திருக்கவில்லை. மூச்சு, பேச்சு இல்லாமல் இருந்தார்.
நண்பர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். சல்மானிடம், புட்டேனஹள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.