UPDATED : அக் 16, 2026 12:00 AM
ADDED : அக் 15, 2026 10:34 PM
கோலார்: தங்கவயல் சட்டசபை தொகுதியில் நடந்த நிகழ்ச்சியில், 'ஆப்பரேஷன் சிந்துார்' ராணுவ நடவடிக்கையில் பங்கேற்ற ராணுவத்தினர் கவுரவிக்கப்பட்டனர்.
கோலார் மாவட்டம், தங்கவயல் தாலுகாவில், ரோடாரேக்ட் மற்றும் பகவான் மஹாவீர் ஜெயின் கல்லுாரி சார்பில், நேற்று நடந்த நிகழ்ச்சியில், ஆப்பரேஷன் சிந்துார் ராணுவ நடவடிக்கையில் சிறப்பாக பணியாற்றிய ராணுவத்தினர் கவுரவிக்கப்பட்டனர்.
நாட்டின் பாதுகாப்புக்காக, எப்போதும் தயார் நிலையில் உள்ள, இந்திய ராணுவத்தினரின் தியாகத்தை நினைவுகூரும் வகையில், இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இதில் போலீஸ் எஸ்.பி., ஷிவான்ஷு ராஜ்புத், தங்கவயல் முன்னாள் எம்.எல்.ஏ., சம்பங்கி, இந்திய ராணுவத்தின் ஓய்வுபெற்ற மேஜர் மதன்குமார், மாநில ஊடக ஒருங்கிணைப்பாளர் கருணாகர கசாலே, பாபி, சுரேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.
