UPDATED : நவ 21, 2026 12:00 AM
ADDED : நவ 20, 2026 09:52 PM

பெங்களூரு: சுதந்திர பூங்காவில், ஆஷா ஊழியர்கள் நேற்று நான்காவது நாளாக போராட்டம் நடத்தினர்.
மாதம் 15,000 ரூபாய் மதிப்பூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பெங்களூரு சுதந்திர பூங்காவில் ஆஷா சுகாதார ஊழியர்கள், நான்காவது நாளாக நேற்று போராட்டம் நடத்தினர்.
அமைச்சர் காதர், மாநில மகளிர் ஆணைய தலைவி நாகலட்சுமி சவுத்ரி, முதல்வர் சிவகுமார் ஆகியோருடன் நடத்திய பேச்சு தோல்வி அடைந்ததால், போராட்டம் தொடர்கிறது.
ஆயிரக்கணக்கான ஊழியர்கள் தங்கள் குழந்தைகளுடன் போராட்டம் நடத்துகின்றனர். இரவு நேரங்களில், கடும் குளிரிலும் போராட்டம் நடத்துவதால் பலருக்கும் சளி, காய்ச்சல் ஏற்படுகிறது.
ஆஷா ஊழியர்கள் போராட்டத்துக்கு ஆதரவாக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் அசோக், மத்திய அமைச்சர் குமாரசாமி உள்ளிட்டோர் கருத்து தெரிவித்து உள்ளனர்.
