தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/அரசு பஸ்சை வழிமறித்து ஆவேச கோஷமிட்டவர் கைது

அரசு பஸ்சை வழிமறித்து ஆவேச கோஷமிட்டவர் கைது

அரசு பஸ்சை வழிமறித்து ஆவேச கோஷமிட்டவர் கைது


UPDATED : நவ 21, 2026 12:00 AM

ADDED : நவ 20, 2026 10:59 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 21, 2026 12:00 AM ADDED : நவ 20, 2026 10:59 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மாண்டியா: அரசு பஸ்சை வழிமறித்து ஆவேச கோஷம் எழுப்பியவர் கைது செய்யப்பட்டார்.

மாண்டியா மாவட்டம் மஹாவீர் சதுக்கத்தில் நேற்று காலை சென்று கொண்டிருந்த கே.எஸ்.ஆர்.டி.சி., அரசு பஸ்சை, அவ்வழியாக ஸ்கூட்டரில் வந்த உமர்பரூக், 29, என்பவர் திடீரென வழிமறித்தார். பஸ்சுக்கு முன்னால் ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு, ஆவேசமாக கோஷம் எழுப்பினார்.

இதனால், பஸ்சில் இருந்த பயணியர் அனைவரும் அச்சம் அடைந்தனர். பின், தனது ஸ்கூட்டரை எடுத்து கொண்டு, அங்கிருந்து புறப்பட்டார்.

இது தொடர்பான வீடியோ, சமூக வலைதளங்களில் வெளியானது. நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கருத்து தெரிவித்தனர்.

இது குறித்து, மாவட்ட எஸ்.பி., ஷோபா ராணி கூறியதாவது:

மாண்டியா ஹலஹள்ளி பகுதியை சேர்ந்த உமர் பரூக் உடனடியாக கைது செய்யப்பட்டார். விசாரணையில், அவர் தனக்குள் கடவுள் புகுந்துவிட்டதாக போலீசாரிடம் கூறினார். அவர், தனது இரண்டாவது மனைவியுடனான குடும்ப சண்டையால், சமீபகாலமாக மனநிலை சரியில்லாதவர் போல நடந்து வருவது தெரிய வந்தது.

அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட உள்ளது. பரிசோதனை அறிக்கை வந்த பின், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us