தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/மகனை கொலை செய்து மனைவியை தாக்கியவர் கைது

மகனை கொலை செய்து மனைவியை தாக்கியவர் கைது

மகனை கொலை செய்து மனைவியை தாக்கியவர் கைது


UPDATED : நவ 21, 2026 12:00 AM

ADDED : நவ 20, 2026 09:52 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 21, 2026 12:00 AM ADDED : நவ 20, 2026 09:52 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பனசங்கரி: குடும்ப தகராறு காரணமாக, மகனை கொலை செய்த நபர், மனைவியை தாக்கி அறையில் அடைத்து விட்டு தப்பியோடினார். அவரை போலீசார் கைது செய்தனர்.

பெங்களூரு பத்மநாபநகரின் ராகவேந்திரா லே – அவுட்டில் அடுக்கு மாடி குடியிருப்பில் வசிப்பவர் சுதீப், 45. இவரது மனைவி சீமாதாஸ். சீமாவுக்கு, சுதீப் இரண்டாவது கணவர்; முதல் கணவரை பிரிந்து, சுதீப்பை திருமணம் செய்து கொண்டார். முதல் கணவரின் மகன் சோஹன்.

சுதீப் வங்கி ஒன்றில் பணியாற்றுகிறார். குடும்ப பிரச்னையால் தம்பதிக்கிடையே தினமும் தகராறு நடக்கும். இதனால் வெறுப்படைந்த அக்கம், பக்கத்து வீட்டினர் வீட்டு உரிமையாளரிடம் புகார் அளித்தனர். அவரும், ‘இதுபோன்று சண்டை போட்டால் வீட்டை காலி செய்யுங்கள்’ என எச்சரித்தார். இந்நிலையில், நவம்பர் 16ம் தேதியன்று, இவர்களின் வீட்டில் சண்டை நடந்தது. அக்கம், பக்கத்தினர் வீட்டின் உரிமையாளரிடம் கூறினர். அவரும் பாதுகாப்பு ஊழியரை தொடர்பு கொண்டு விசாரித்த போது, சுதீப் வீட்டில் எந்த சத்தமும் இல்லை என, கூறினார்.

ஆனால் மூன்று நாட்களாக வீடு அமைதியாக இருந்தது. யாரும் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த அப்பகுதியினர், வீட்டு உரிமையாளருக்கு தகவல் கொடுத்தனர்.

அவர் நேற்று முன் தினம் இரவு அங்கு வந்தார். கதவை தட்டியும் திறக்காததால், போலீசாருக்கு தகவல் கொடுத்தார். போலீசாரும் அங்கு வந்து மாற்று சாவியால், கதவை திறந்து பார்த்த போது தரையிலும், சுவற்றிலும் ரத்தக்கறை இருந்தது. ஒரு அறையில் இருந்து சீமாவின் அலறல் கேட்டது. அறையை திறந்து பார்த்த போது, அவர் ரத்த காயங்களுடன் கிடந்தார்.

அவரை விசாரித்த போது, மூன்று நாட்களுக்கு முன் கணவர், சுதீப் தன்னையும், தன் மகனையும் சுத்தியலால் தாக்கியதாக கூறினார்.

அதன் பின், குளியலறையில் சோஹன் கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரிந்தது. அவரது உடலை மீட்ட போலீசார், சீமாவை மருத்துவமனையில் சேர்த்தனர். சுதீப்பை கண்டுபிடித்து கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us