/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சாமுண்டீஸ்வரி 'சலோ' போராட்டம் காங்., அரசுக்கு அசோக் எச்சரிக்கை
/
சாமுண்டீஸ்வரி 'சலோ' போராட்டம் காங்., அரசுக்கு அசோக் எச்சரிக்கை
சாமுண்டீஸ்வரி 'சலோ' போராட்டம் காங்., அரசுக்கு அசோக் எச்சரிக்கை
சாமுண்டீஸ்வரி 'சலோ' போராட்டம் காங்., அரசுக்கு அசோக் எச்சரிக்கை
ADDED : ஆக 31, 2025 11:18 PM

மைசூரு: ''சாமுண்டீஸ்வரி கோவில் புனிதத்திற்கு களங்கம் ஏற்பட்டால் போராட்டம் நடத்துவோம்,'' என்று, எதிர்க்கட்சி தலைவர் அசோக் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
மைசூரு சாமுண்டீஸ்வரி கோவிலில், எதிர்க்கட்சி தலைவர் அசோக் நேற்று சாமி தரிசனம் செய்தார். பின், அவர் அளித்த பேட்டி:
மைசூரு தசராவுக்கு பாரம்பரியம் உள்ளது. பல நாடுகளில் இருந்து மைசூருக்கு வருவோர், சாமுண்டீஸ்வரி அம்மனை வழிபடுகின்றனர். அம்மன் மீது தனக்கும் பக்தி உள்ளது என்று பானு முஷ்டாக் கூற வேண்டும். கன்னட தாய் புவனேஸ்வரியை ஏற்றுக்கொள்ள முடியாத பானு முஷ்டாக்கால், சாமுண்டீஸ்வரியை எப்படி ஏற்க முடியும். கன்னட கொடியை அவமதித்ததற்கு, முதலில் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்.
சாமுண்டீஸ்வரி கோவில் ஹிந்துக்களுக்கு சொந்தமானது இல்லை என்றால் யாருக்கு சொந்தமானது. துணை முதல்வர் சிவகுமாருக்கு தைரியம் இருந்தால், மசூதி முன்பு நின்று மசூதி முஸ்லிம்களுக்கு சொந்தமானது இல்லை என்று சொல்லட்டும். காங்கிரஸ் ஏன் மீண்டும், மீண்டும் ஹிந்து கோவில்களை குறிவைக்கிறது.
தேர்தல் நேரத்தில் ஓட்டு வங்கிக்காக நீங்கள் அரசியல் செய்யுங்கள்; இப்போதே ஏன் திருப்திபடுத்தும் அரசியல் செய்கிறீர்கள். தர்மஸ்தலாவை பாதுகாக்க நாளை (இன்று) முதல் 'தர்மஸ்தலா சலோ' நடக்கிறது. அனைத்து ஹிந்துக்களும் வர வேண்டும். தசரா துவக்க நிகழ்ச்சியின் போது, சாமுண்டீஸ்வரி கோவில் புனிதத்திற்கு ஏதாவது களங்கம் ஏற்பட்டால், 'சாமுண்டீஸ்வரி சலோ' நடத்துவோம்.
கடந்த ஆண்டு மாண்டியா, நாகமங்களாவில் விநாயகர் சிலையை பறிமுதல் செய்து, போலீஸ் ஜீப்பில் எடுத்துச் சென்றனர். இந்த ஆண்டு விநாயகர் சிலை வைக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பிரச்னை ஏற்பட அரசே வழிவகுக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.