தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ தேவகவுடா மனைவிக்கு சட்டசபையில் இரங்கல்

 தேவகவுடா மனைவிக்கு சட்டசபையில் இரங்கல்

 தேவகவுடா மனைவிக்கு சட்டசபையில் இரங்கல்


ADDED : ஆக 13, 2026 11:22 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 13, 2026 11:22 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: முன்னாள் அமைச்சர்கள் டி.சுதாகர், வெங்கடரமணப்பா, வீரண்ணா, ராமசந்திர கவுடா, தேவகவுடா மனைவி சென்னம்மா மறைவுக்கு, கர்நாடக சட்டசபையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

கர்நாடக சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொ டர் நேற்று துவங்கியது .முன்னாள் அமைச்சர்கள் டி.சுதாகர், வெங்கடரமணப்பா, வீரண்ணா, ராமசந்திர கவுடா, முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் சீனிவாசய்யா, புட்ட ரங்கநாத், சையது யாசின், சீனிவாஸ், சந்திரசேகரப்பா, வெங்கடசலய்யா, கிருஷ்ணப்பா, முன்னாள் ராஜ்யசபா எம்.பி., ஹனுமந்தப்பா, பின்னணி பாடகிகள் ஜானகி, ஆஷா போஸ்லே, முன்னாள் பிரதமர் தேவகவுடா மனைவி சென்னம்மா ஆகிய 15 பேரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானத்தை, சட்டசபை இடைக்கால சபாநாயகர் ஜெயசந்திரா கொண்டு வந்தார்.

தீர்மானத்தின் மீது முதல்வர் சிவகுமார், எதிர்க்கட்சி தலைவர் அசோக், துணை முதல்வர் பரமேஸ்வர், பா.ஜ.,வின் விஜயேந்திரா, அரக ஞானேந்திரா, சென்னபசப்பா, சந்திரப்பா உள்ளிட்டோரும்; ம.ஜ.த.,வின் சுரேஷ் பாபு உள்ளிட்டோரும் பேசினர். அனைவரும் சென்னம்மாவை, அன்னபூரணி என்று வர்ணித்தனர்.

இரங்கல் தீர்மானம் நிறைவேறிய பின், சட்டசபை இன்று காலை 11:00 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us