ADDED : ஆக 13, 2026 12:14 AM
பெங்களூரு: கர்நாடக சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடர் இன்று துவங்குகிறது. அரசை நோக்கி கேள்வி கணைகளை விட எதிர்க்கட்சிகளும், பதிலடி கொடுக்க முதல்வரும், அமைச்சர்களும் தயாராக உள்ளனர்.
கர்நாடக சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடர், பெங்களூரு விதான் சவுதாவில் இன்று காலை 11:00 மணிக்கு துவங்குகிறது. முன்னாள் பிரதமர் தேவகவுடா மனைவி சென்னம்மா, மரணம் அடைந்த முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள், முக்கிய பிரமுகர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.
பின், முதல்வராக பொறுப்பேற்றுள்ள சிவகுமார், தனது அமைச்சரவை சகாக்களை, சட்டசபைக்கு அறிமுகம் செய்ய உள்ளார். இதை தொடர்ந்து வழக்கம் போல கேள்வி, பதில்கள், முக்கிய பிரச்னைகள் குறித்த விவாதம் நடக்க உ ள்ளன.
பிடதி டவுன்ஷிப் விவகாரம், கே.பி.எஸ்.சி.,யில் நடந்த முறைகேடு, ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய நாகேந்திராவுக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கியது, வறட்சி பிரச்னை உட்பட பல முக்கிய விஷயங்களை முன்வைத்து, அரசை நோக்கி கேள்வி கணைகளை விட எதிர்க்கட்சிகள் தயாராக உள்ளனர்.
எதிர்க்கட்சியினர் கேள்விக்கு பதிலடி கொடுக்க, முதல்வர் சிவகுமாரும், அமைச்சர்களும் தயாராக உள்ளனர். எதிர்க்கட்சியினர் எழுப்பும் கேள்விகளை திறம்பட சமா ளிப்பது எப்படி என்று, அமைச்சர்களுக்கு நேற்று மாலை சிவகுமார் வகுப்பு எடுத்தார்.
சிவகுமார் முதல்வரானதும் நடக்கும் முதல் சட்டசபை கூட்டத்தொடர் என்பதால், இந்த கூட்டத்தொடரில் எந்த பரபரப்புக்கும் பஞ்சம் இருக்காது என்றே சொல்லலாம்.
