/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பெலகாவியில் டிச., 8 முதல் சட்டசபை கூட்டத்தொடர்
/
பெலகாவியில் டிச., 8 முதல் சட்டசபை கூட்டத்தொடர்
ADDED : அக் 25, 2025 11:03 PM

தார்வாட்: ''நடப்பாண்டு குளிர்கால சட்டசபை கூட்டத்தொடர் டிச., 8ம் தேதி துவங்க முடிவு செய்யப்பட்டுள்ளது,'' என, மேல்சபை தலைவர் பசவராஜ் ஹொரட்டி தெரிவித்தார்.
தார்வாடில் நேற்று அவர் அளித்த பேட்டி:
நடப்பாண்டு குளிர்கால சட்டசபை கூட்டத்தொடர் டிச., 8ம் தேதி துவங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக பெலகாவி கலெக்டருடன் அடுத்த வாரம் ஆலோசனை நடத்த உள்ளேன். இது தொடர்பாக முதல்வரிடமும் விவாதித்து உள்ளேன்.
வட மாவட்டங்களை சேர்ந்த எம்.எல்.ஏ.,க்கள், தொகுதி மேம்பாட்டில் அக்கறை காட்டுவதில்லை. தெற்கு மாவட்ட எம்.எல்.ஏ.,க்கள் மட்டுமே அக்கறை காட்டுகின்றனர்.
புதன், வியாழக்கிழமைகளில் வட மாவட்ட பிரச்னை குறித்து விவாதிக்க, எம்.எல்.ஏ.,க்களுக்கு அழைப்பு விடுக்கப்படுகிறது. ஆனால் ஒரு எம்.எல்.ஏ.,கூட தொகுதி பிரச்னை குறித்து வாய் திறப்பதில்லை.
இன்னும் இரண்டு நாட்களில், எம்.எல்.ஏ.,க்களுக்கு சுற்றறிக்கை அனுப்புவேன். இம்முறை வட மாவட்டங்கள் மேம்பாட்டுப் பணிகள் குறித்த விவாதம் நடக்கும் என எதிர்பார்க்கிறேன். இதுபோன்று எம்.எல்.சி.,க்களுக்கும் கடிதம் எழு துவேன்.
நவம்பர் புரட்சியோ அல்லது டிசம்பர் புரட்சியோ, நாங்கள் எப்போதும் அவர்களை கண்காணிப்போம். ஊடகத்தினரும் முக்கிய பிரச்னைகள் குறித்து விவாதிக்காமல், தனிப்பட்ட விஷயங்கள் குறித்து விவாதிக்கின்றனர். தேவையின்றி விவாதிக்கக் கூடாது. மாநில மக்களுக்கு பல பணிகள் செய்து கொடுக்க வேண்டும்.
மனிதநேயம் உள்ளவராக இருந்திருந்தால், முன்னாள் எம்.பி., பிரதாப் சிம்ஹாவை, எம்.எல்.ஏ., பிரதீப் ஈஸ்வர், அவதுாறாக பேசி இருக்க மாட்டார். எம்.எல்.ஏ.,வாக இருப்போர் முன்மாதிரியாக திகழ வேண்டும். எம்.எல்.ஏ.,வாக வருவோர் சரியாக பேச கற்றுக் கொள்ள வேண்டும். இத்தகையோருக்கு சமூகத்திற்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

