தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/பட்டாசு வெடித்து 32 பேர் காயம்

பட்டாசு வெடித்து 32 பேர் காயம்

பட்டாசு வெடித்து 32 பேர் காயம்


UPDATED : நவ 10, 2026 12:00 AM

ADDED : நவ 09, 2026 08:46 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 10, 2026 12:00 AM ADDED : நவ 09, 2026 08:46 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: பெங்களூரில் இரண்டு நாட்களில் பட்டாசு வெடிக்கும் போது 13 குழந்தைகள் உட்பட 32 பேருக்கு கண்களில் காயம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பெங்களூரு நகரில் நேற்று முன்தினம் முதல் நேற்று மாலை வரை பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. இதில் பட்டாசுகள் வெடித்தவர்கள் மட்டுமின்றி, அதனை வேடிக்கை பார்த்தவர்களும் காயம் அடைந்து உள்ளனர்.

நாராயணா நேத்ராலயாவில் 13 குழந்தைகள், 7 பெரியவர்கள் என 20 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட் டது. பட்டாசு தீப்பொறியால் சிலரின் கண்களில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

பட்டாசுகளை வெடித்தபோது, 17 பேர் காயம் அடைந்தனர். அதே நேரத்தில் வாண வேடிக்கையை பார்த்து கொண்டிருந்த மூவரும் காயம் அடைந்தனர். காயம் அடைந்தோருக்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அதுபோன்று, மின்டோ கண் மருத்துவமனையில் 9க்கும் மேற்பட்டோருக்கு காயம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். பிஜிலி பட்டாசு வெடிப்பதை வேடிக்கை பார்த்து கொண்டிருந்த 6 வயது சிறுவனின் கண்ணில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளித்து வருகிறார்.

சங்கரா கண் மருத்துவமனை, பிரபா கண் மருத்துவமனைகளிலும் சிலர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

‘பட்டாசு வெடிக்கும் போது பாதுகாப்புக்கு கண்ணாடி அணிய வேண்டும். காயம் ஏற்பட்டால், உடனடியாக சிகிச்சை பெற வேண்டும்’ என டாக் டர்கள் தெரிவித்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us