தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/அரண்மனையை கைப்பற்ற முயற்சி பா.ஜ., – எம்.பி., யதுவீர் ‘திடுக்’

அரண்மனையை கைப்பற்ற முயற்சி பா.ஜ., – எம்.பி., யதுவீர் ‘திடுக்’

அரண்மனையை கைப்பற்ற முயற்சி பா.ஜ., – எம்.பி., யதுவீர் ‘திடுக்’


UPDATED : நவ 10, 2026 12:00 AM

ADDED : நவ 09, 2026 09:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 10, 2026 12:00 AM ADDED : நவ 09, 2026 09:44 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மைசூரு: ‘‘மை சூரு அரண்மனையை கைப்பற்ற அரண்மனை நிர்வாக வாரியத்தை தவறாக பயன்படுத்த முயற்சிகள் நடந்துள்ளன. இருப்பினும், நீதிமன்றம் மூலம் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது,’’ என மைசூரு பா.ஜ., – எம்.பி., யதுவீர் உடையார் தெரிவித்தார்.

இந்தாண்டு மைசூரு தசரா வின் போது, வஜ்ர முஷ்டி சண்டை நிறுத்தப்பட்டது தொடர்பாக, மன்னர் குடும்பத்தின் பிரமோதா தேவிக்கும், மாவட்ட பொறுப்பு வகிக்கும் அமைச்சர் யதீந்திராவுக்கும் இடையே வார்த்தை மோதல் கள் ஏற்பட்டு உள்ளன.

மைசூரில் நேற்று பா.ஜ., – எம்.பி.,யும், மன்னர் குடும்பத்தை சேர்ந்தவருமான யதுவீர் உடையாளர் அளித்த பேட்டி:

மைசூரு சாமுண்டி மலை அடிவாரத்தில் கட்டப்பட்டு உள்ள நாட்டின் முதல் தனித்துவமான கோளரங்கத்தை பிரதமர் நரேந்திர மோடி, நவ., 13ம் தேதி திறந்து வைக்கிறார். இந்த கோளரங்கம் சுற்றுலாவை ஊக்குவிப்பதோடு, மாணவர்களுக்கும் பயனளிக்கும்.

மைசூரு அரண்மனையை கைப்பற்ற அரண்மனை நிர்வாக வாரியத்தை தவறாக பயன்படுத்த முயற்சிகள் நடந்து வருகின்றன. இருப்பினும், நீதிமன்றம் மூலம் நீதி வழங்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளது.

இந்தாண்டு தசரா பண்டிகையில் இருந்த சில குறைகள், அடுத்த தசரா பண்டிகையில் சரி செய்யப்பட வேண்டும். இந்தாண்டு தசரா பண்டிகை முடிந்துவிட்டது. எனவே, குறைகளை பற்றி விவாதிக்க தேவையில்லை. அரண்மனை வளாகத்தின் பாதுகாப்பு, வெளியாட்களிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளதால், அது வஜ்ர முஷ்டிக்கு தடையாக உள்ளது.

மாநிலத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக, எத்தனால் பிரச்னையை அரசு கையில் எடுத்துள்ளது.

எத்தனால் பயன்படுத்துவதால், வாகனங்களின் செயல்திறன் பாதிக்கப்படுகிறது என்பதற்கு எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us