தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/சித்தராமையா வீடியோ வழக்கு காங்., பிரமுகர் கிருபா ஆல்வா ஆஜர்

சித்தராமையா வீடியோ வழக்கு காங்., பிரமுகர் கிருபா ஆல்வா ஆஜர்

சித்தராமையா வீடியோ வழக்கு காங்., பிரமுகர் கிருபா ஆல்வா ஆஜர்


UPDATED : நவ 10, 2026 12:00 AM

ADDED : நவ 09, 2026 09:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 10, 2026 12:00 AM ADDED : நவ 09, 2026 09:44 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: சித்தராமையா தொடர்பான வீடியோ வழக்கில், காங்கிரஸ் பெண் பிரமுகர் கிருபா ஆல்வா விசாரணைக்கு ஆஜராகியுள்ளார்.

காங்கிரஸ் முன்னாள் முதல்வர் சித்தராமையா பற்றி பெண் ஒருவர் பேசும் வீடியோ வெளியான வழக்கை, சி.சி.பி., போலீசார் விசாரிக்கின்றனர். இந்த வழக்கில் டில்லியை சேர்ந்த ரித்தேஷ் குமார் பாண்டே, 22, என்பவர் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.

ம.ஜ.த., சமூக ஊடக பிரிவில் பணியாற்றும் மோகன் கவுடா, சேத்தன், மத்திய அமைச்சர் குமாரசாமியின் மக்கள் தொடர்பு அதிகாரி பிரஜ்வல் உள்ளிட்டோரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

இந்த வழக்கில் தட்சிண கன்னடா மாவட்டத்தை சேர்ந்த, காங்கிரஸ் பெண் பிரமுகர் கிருபா ஆல்வாவுக்கும் தொடர்பு இருப்பது தெரிந்தது. இதனால் அவர் கட்சியில் இருந்து ஆறு ஆண்டுகள் நீக்கப்பட்டார். விசாரணைக்கு ஆஜராக அவருக்கு, சி.சி.பி., போலீசார் சம்மன் அனுப்பினர். ஆனால் அவர் வெளிநாடு சென்று விட்டார்.

இந்நிலையில் நேற்று காலை தனது வக்கீல் நிகிதாவுடன், பெங்களூரு சி.சி.பி., அலுவலகத்திற்கு சென்ற கிருபா ஆல்வா விசாரணைக்கு ஆஜராகினார். அவரிடம் இரண்டு மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.

‘சித்தராமையாவை பற்றி பேசிய பெண்ணை உங்களுக்கு தெரியுமா; அந்த பெண் சிறுமியாக இருந்த போது அளிக்கப்பட்ட புகார் மீது நீங்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறதே; வீடியோ வெளியானதில் உங்கள் பங்கு என்ன’ என்பது உட்பட பல கேள்விகளை எழுப்பியுள்ளனர்.

இதற்கு கிருபா ஆல்வாவும் பதில் அளித்துள்ளார். விசாரணைக்கு பின், அவர் அனுப்பி வைக்கப்பட்டார். மீண்டும் 11ம் தேதி ஆஜராக அவருக்கு சம்மன் கொடுக் கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us