தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/சசிஹித்லு, தாகூர் கடற்கரைகளுக்கு சர்வதேச அங்கீகாரம் பெற முயற்சி

சசிஹித்லு, தாகூர் கடற்கரைகளுக்கு சர்வதேச அங்கீகாரம் பெற முயற்சி

சசிஹித்லு, தாகூர் கடற்கரைகளுக்கு சர்வதேச அங்கீகாரம் பெற முயற்சி


UPDATED : நவ 05, 2026 11:59 PM

ADDED : நவ 04, 2026 09:17 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 05, 2026 11:59 PM ADDED : நவ 04, 2026 09:17 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: மங்களூரில் உள்ள சசிஹித்லு, கார்வாரில் உள்ள தாகூர் கடற்கரைகளுக்கு சர்வதேச அங்கீகாரம் பெற, அரசு முயற்சித்து வருகிறது.

முதல்வர் சிவகுமார் தலைமையில், கடந்த செப்டம்பர் 18ம் தேதி மங்களூரில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில், கடலோர மாவட்டங்கள் மேம்பாட்டிற்கு, 16 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதில் கடலோர, மலைநாடு மாவட்டங்களில் உள்ள ஒன்பது சுற்றுலா தலங்களை மேம்படுத்த, 500 கோடி ரூபாய்; மங்களூரு தண்ணீர்பாவி கடற்கரையில் கடல் அனுபவ மையம் மற்றும் கண்காட்சி மண்டலம் அமைக்க, 53 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.

இந்நிலையில், மங்களூரில் உள்ள சசிஹித்லு; கார்வாரில் உள்ள தாகூர் கடற்கரைகளுக்கு நீலக்கொடி சான்றிதழ் எனும் சர்வதேச அங்கீகாரம் பெற அரசு முயற்சிகளை மேற்கொள்கிறது.

இது தொடர்பாக மீன்வளத்துறை சார்பில் கூட்டம் நடத்தப்பட்டு விரிவான திட்ட அறிக்கையும் தயாரிக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவை கூட்டத்தில் இந்த அறிக்கையை வைத்து விவாதித்து, ஒப்புதல் கிடைத்த பின், மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கவும் அரசு தயாராக உள்ளது.

கடற்கரைகளுக்கு நீலக்கொடி சான்றிதழ் பெறுவது அவ்வளவு எளிதான விஷயமும் இல்லை. அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்றால் சர்வதேச அளவில் நிர்ணயிக்கப்பட்ட, 33 கடுமையான நிபந்தனைகளை பூர்த்தி செய்திருக்க வேண்டும்.

குறிப்பாக, கடல் நீர் குளிப்பதற்கு உகந்ததாக இருக்க வேண்டும்; கடற்கரை சுத்தமாக இருக்க வேண்டும்; வெளிநாடுகளின் சுற்றுலா பயணியரை கவரும் வகையில் இருக்க வேண்டும்; தகுதியான உயிர்காப்பாளர்கள், முதலுதவி வசதிகள், துாய்மையான கழிப்பறை மற்றும் குடிநீர் வசதிகள்; மாற்றுத்திறனாளிகளும் கடலை எளிதில் அணுகும் முறைக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் போன்றவை இருக்க வேண்டும்.

நீலக்கொடி சான்றிதழ் ஒரு முறை பெற்றால், நிரந்தரமாக இருக்க கூடியது இல்லை.

ஒவ்வொரு ஆண்டும் புதுப்பிக்கப்படும். சான்றிதழ் பெற்ற பின், கடற்கரைகளின் தரம் ஏதாவது குறைந்தால், சான்றிதழ் திரும்ப பெறப்படும்.

கர்நாடகாவின் உடுப்பியில் உள்ள படுபித்ரி, உத்தர கன்னடாவில் உள்ள ஹொன்னாவர் கடற்கரைகள், நீலக்கொடி சான்றிதழ் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us