ஹாசனாம்பா சிறப்பு தரிசனம் கட்சியினருக்கு டிக்கெட் வாங்கிய அமைச்சர்
ஹாசனாம்பா சிறப்பு தரிசனம் கட்சியினருக்கு டிக்கெட் வாங்கிய அமைச்சர்
UPDATED : நவ 05, 2026 11:59 PM
ADDED : நவ 04, 2026 09:17 PM
ஹாசன்: ஹாசனாம்பாவை தரிசனம் செய்ய, கட்சி நிர்வாகிகளுக்காக, ஐந்து லட்சம் ரூபாய் கொடுத்து, அமைச்சர் சிவலிங்கே கவுடா 500 டிக்கெட் வாங்கினார்.
இது குறித்து, அவர் கூறியதாவது:
ஹாசனாம்பாவை தரிசனம் செய்ய, கோல்டு பாஸ்கள் குறைந்த எண்ணிக்கையில் வழங்கப்படுகின்றன. அதிகமான கோல்டு பாஸ்கள் வழங்கினால், தர்ம தரிசன வரிசையில் வரும் பக்தர்களுக்கு பாதிப்பு ஏற்படும். கட்சி நிர்வாகிகளுக்கு கோல்டு பாஸ்கள் கிடைக்காது.
எனவே, ஹாசன் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சசிதர் உட்பட, மற்ற நிர்வாகிகளுக்காக, ஐந்து லட்சம் ரூபாய் கொடுத்து, 1,000 ரூபாய் கட்டணம் கொண்ட, 500 டிக்கெட் வாங்கினேன். இந்த டிக்கெட்களை, மாவட்ட காங்., தலைவர் சசிதரிடம் ஒப்படைத்துள்ளேன். நிர்வாகிகளுக்கு சிறப்பு தரிசன டிக்கெட்டுகளை வழங்குவார்.
அவரிடம் டிக்கெட்களை பெற்று கொண்டு, ஹாசனம்பாவை தரிசிக்கலாம். ஹாசனம்பா கோவிலில், இன்றும் கூட பெருமளவில் பக்தர்கள் வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
