தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/‘ஸ்மார்ட்’ கண்ணாடி அணிந்து தேர்வு எழுதிய மாணவருக்கு பல்கலை தடை

‘ஸ்மார்ட்’ கண்ணாடி அணிந்து தேர்வு எழுதிய மாணவருக்கு பல்கலை தடை

‘ஸ்மார்ட்’ கண்ணாடி அணிந்து தேர்வு எழுதிய மாணவருக்கு பல்கலை தடை


UPDATED : நவ 05, 2026 11:51 PM

ADDED : நவ 04, 2026 07:07 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 05, 2026 11:51 PM ADDED : நவ 04, 2026 07:07 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: செமஸ்டர் தேர்வில் ‘ஸ்மார்ட்’ கண்ணாடியை அணிந்து வந்து சிக்கிய மாணவர், மற்ற தேர்வுகளை எழுத, மவுன்ட் கார்மல் பல்கலைக்கழகம் தடை விதித்து உள்ளது.

பெங்களூரு மவுன்ட் கார்மல் பல்கலைக்கழக தேர்வு, நேற்று முன்தினம் துவங்கியது. தேர்வுக்கு வந்திருந்த மாணவர் ஒருவர், வழக்கத்திற்கு மாறாக, வித்தியாசமான கண்ணாடி அணிந்திருந்தார்.

முதலில், தேர்வு அறை கண்காணிப்பாளர் கண்டுகொள்ளவில்லை. ஆனால், மாணவரின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த அவர், ஒரு மணி நேரம் அவரை கண்காணித்தார்.

பின், மாணவர் அருகில் சென்ற கண்காணிப்பாளர், அவரின் கண்ணாடியை கழற்றி கொடுக்கும்படி கேட்டார். முதலில் தயங்கிய மாணவர், பின், கொடுத்த போது, அதில் ஒலி கேட்டது. கண்ணாடியில் மின்னணு சாதனம் இருக்கலாம் என்ற சந்தேகித்த அவர், அதை பல்கலைக்கழக அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்.

பல்கலைக்கழக நிர்வாகிகள் கூறுகையில், ‘இச்சம்பவம் குறித்து, முதல் செமஸ்டரின் மீதமுள்ள தேர்வுகளை எழுத, மாணவருக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. அதே வேளையில், மூன்றாவது செமஸ்டரில், எழுதாத தேர்வுகளை, அப்போது எழுத அனுமதிக்கப்படுவார்’ என்றனர்.

பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் லேகா ஜார்ஜ் கூறியதாவது:

தேர்வின் போது மாணவர்கள் ஒழுக்கத்தை பேணுவதற்கும், மதிப்பீட்டு முறையை பாதுகாக்கவும் உறுதி பூண்டுள்ளோம். ஸ்மார்ட் கண்ணாடியை கண்டறிவதில் தேர்வு கண்காணிப்பாளர் காட்டிய முனைப்பு பாராட்டுக்குரியது.

ஸ்மார்ட் சாதனங்கள் தேர்வு முறைக்கு புதிய சவால்களை தந்துள்ளன. நவீன தொழில்நுட்பத்தால், கல்வி நிறுவனங்கள் எதிர்கொள்ளும் சவால்களை இச்சம்பவம் எடுத்து காட்டியுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மாணவர் அணிந்திருந்த ஸ்மார்ட் கண்ணாடி, 34 ஆயிரம் ரூபாயாகும். இந்த கண்ணாடியை அணிந்து தேர்வு தாளை பார்க்கும்போது, அதனை ஸ்கேன் செய்யும் கண்ணாடி, அதற்கான விடையை அதிலேயே காண்பிக்கும். அதை விடைத்தாளில் எழுதலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us