/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
அரசு டாக்டர்கள் அலட்சியம் தாய் வயிற்றில் உயிரிழந்த சிசு
/
அரசு டாக்டர்கள் அலட்சியம் தாய் வயிற்றில் உயிரிழந்த சிசு
அரசு டாக்டர்கள் அலட்சியம் தாய் வயிற்றில் உயிரிழந்த சிசு
அரசு டாக்டர்கள் அலட்சியம் தாய் வயிற்றில் உயிரிழந்த சிசு
ADDED : டிச 08, 2025 05:52 AM
யாத்கிர்: சரியான நேரத்தில் டாக்டர்கள், பிரசவம் பார்க்காத காரணத்தால் கர்ப்பிணியின் வயிற்றில் இருந்த ஆண் குழந்தை உயிரிழந்தது.
யாத்கிர் நகரின் பளிசக்ரா கிராமத்தில் வசிப்பவர் தேவப்பா, 35; இவரது மனைவி நீலாபாய், 30, நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். அவருக்கு நேற்று முன்தினம் மாலை பிரசவ வலி ஏற்பட்டது.
குடும்பத்தினர் அவரை யாத்கிரின் அரசு மகப்பேறு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அவருக்கு வலி அதிகமாக இருந்தும், மருத்துவமனை டாக்டர்கள், ஊழியர்கள் பொருட்படுத்தவில்லை. நீலாபாய்க்கு உடனடியாக சிகிச்சை அளிக்காமல், அலட்சியம் காண்பித்தனர்.
குறைந்தபட்சம் அவருக்கு படுக்கையும் தரவில்லை. இரவு முழுதும் வலியால் தவித்த அவருக்கு, நேற்று காலையில் ரத்த போக்கு ஏற்பட்டது. அதன்பின் டாக்டர்கள், அறுவை சிகிச்சை செய்து, குழந்தையை வெளியே எடுத்தனர். ஆனால் குழந்தை, வயிற்றிலேயே உயிரிழந்திருந்தது.
'கர்ப்பிணியை மருத்துவமனைக்கு அழைத்து வந்த போதே, பிரசவம் பார்த்து சிகிச்சை அளித்திருந்தால், குழந்தை பிழைத்திருக்கும். டாக்டர்களின் அலட்சியத்தால் குழந்தை இறந்தது. டாக்டர்கள், ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி, சுகாதாரத்துறையிடம் வலியுறுத்தினர்.
தேவப்பா, நீலாபாய் தம்பதிக்கு ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். மூன்றாவது ஆண் குழந்தை, டாக்டர்களின் அலட்சியத்தால் தாயின் வயிற்றிலேயே இறந்து விட்டது.

