ADDED : செப் 16, 2025 05:12 AM
மாண்டியா: பெண்களுக்கு நடத்துவது போன்று, கர்ப்பம் தரித்த இரண்டு பசுக்களுக்கு, குடும்பத்தினர் சாஸ்திர, சம்பிரதாயப்படி வளைகாப்பு நடத்தினர்.
மாண்டியா மாவட்டம், ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகாவின் கஞ்சாம் கிராமத்தில் வசிப்பவர் இளம் விவசாயி ஹேமந்த்.
இவர் பட்டப்படிப்பு படித்தவர். இவரது வீட்டில் இரண்டு பசுக்களை வளர்க்கின்றனர். இவைகளுக்கு, 'கனசு, நனசு' என, பெயர் சூட்டியுள்ளனர்.
இரண்டு பசுக்களும் கர்ப்பம் தரித்துள்ளதால், குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இரண்டு பசுக்களுக்கும் நேற்று காலையில் சாஸ்திர, சம்பிரதாயப்படி வளைகாப்பு நடத்தினர். வளைகாப்புக்கு கர்ப்பிணியரை அலங்கரிப்பது போன்று, பசுக்களுக்கு அலங்காரம் செய்திருந்தனர். வீட்டு முன் ஷாமியானா போட்டு மேடை அமைத்து இரண்டு பசுக்களுக்கும் வளைகாப்புநடந்தது.
நிகழ்ச்சிக்கு வந்திருந்த மக்களுக்கு இனிப்புடன் விருந்து வழங்கப்பட்டது.