/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சபாரி வாகனத்தை விரட்டிய பண்டிப்பூர் காட்டு யானை
/
சபாரி வாகனத்தை விரட்டிய பண்டிப்பூர் காட்டு யானை
ADDED : செப் 07, 2025 10:53 PM

சாம்ராஜ்நகர், : சாம்ராஜ்நகர் மாவட்டம், குண்டுலுபேட் தாலுகாவில் உள்ள பண்டிப்பூர் வனப்பகுதியில் நேற்று காலையில் சுற்றுலா பயணியர் சபாரி சென்று கொண்டிருந்தனர்.
அப்போது ஒரு காட்டு யானை, திடீரென சாலையின் குறுக்கே வந்தது. இதை பார்த்து சுற்றுலா பயணியர் பீதி அடைந்தனர். சபாரி வாகன ஓட்டுநர் தாமதிக்காமல், ஜீப்பை 'ரிவர்ஸ்' எடுத்தார்.
யானையும் விரட்டி ஓடி வந்தது. சிறிது துாரம் வந்த யானை, சோர்வடைந்து விரட்டுவதை விட்டு விட்டு, வனப்பகுதிக்குள் சென்றது. யானை விரட்டி வந்ததை பார்த்து சிலர் பயந்தாலும், சில வாகன பயணியர் யானையை வீடியோ எடுத்தனர். அதிர்ஷ்டவசமாக யாருக்கும் அபாயம் ஏற்படவில்லை.
வனப்பகுதி சாலையில் செல்லும் போது, வன விலங்குகளை போட்டோ, வீடியோ எடுக்க கூடாது. இது அபாயத்தை ஏற்படுத்தும் என, வனத்துறை அதிகாரிகள் பலமுறை எச்சரித்தும், சுற்றுலா பயணியர், வாகன பயணியர் பொருட்படுத்துவது இல்லை.