தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ இளம்பெண் பலாத்காரம் டிரைவர் உட்பட 5 பேர் கைது

 இளம்பெண் பலாத்காரம் டிரைவர் உட்பட 5 பேர் கைது

 இளம்பெண் பலாத்காரம் டிரைவர் உட்பட 5 பேர் கைது


ADDED : ஜூலை 04, 2026 11:26 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 04, 2026 11:26 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தலகட்டபுரா: பிறந்த நாள் பார்ட்டிக்கு இளம்பெண்ணை வரவழைத்து, பாலியல் பலாத்காரம் செய்தது தொடர்பாக, ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது குறித்து தென் மேற்கு மண்டல டி.சி.பி., அனிதா, நேற்று அளித்த பேட்டி:

கலபுரகியை சேர்ந்தவர் சோமசேகர், 26. இவர், பெங்களூரு நகரில் செக்யூரிட்டி ஏஜன்சி நடத்துகிறார். தலகட்டபுராவில் அறை எடுத்து தங்கியுள்ளார். தன் அறையில் அவ்வப்போது நண்பர்களுடன் பார்ட்டி நடத்துவது வழக்கம்.

அதன்படி நேற்று (முன் தினம்) நான்கு நண்பர்களுடன், பிறந்த நாள் பார்ட்டி நடத்தினார். இந்த பார்ட்டிக்கு வரும்படி தன் தோழியை அழைத்தார். அவரும் பார்ட்டியில் பங்கேற்றார். அவருக்கு குளிர்பானத்தில், மயக்க மருந்து கலந்து கொடுத்தனர். அரை நினைவுடன் இருந்த இளம் பெண்ணை, சோமசேகரின் நண்பரான வாடகைக்கார் ஓட்டுநர் அம்பரிஷ், 28, பாலியல் பலாத்காரம் செய்தார். இதை மற்ற நால்வரும் பார்த்தபடி இருந்தனர்.

நடந்த சம்பவம் குறித்து, தலகட்டபுரா போலீஸ் நிலையத்தில் இளம்பெண் புகார் அளித்தார். சோமசேகர், அம்பரிஷ் உட்பட ஐவரை போலீசார் கைது செய்தனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us