தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ பெங்களூரு - துமகூரு சுங்க கட்டணம் ரூ.5 முதல் ரூ.165 ரூபாய் வரை உயர்வு

 பெங்களூரு - துமகூரு சுங்க கட்டணம் ரூ.5 முதல் ரூ.165 ரூபாய் வரை உயர்வு

 பெங்களூரு - துமகூரு சுங்க கட்டணம் ரூ.5 முதல் ரூ.165 ரூபாய் வரை உயர்வு


ADDED : செப் 02, 2026 12:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 02, 2026 12:52 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நெலமங்களா: தேசிய நெடுஞ்சாலை ஆணையம், 2026 - 27ம் ஆண்டுக்கான சுங்க கட்டணத்தை திருத்தி அமைத்ததை அடுத்து, துமகூரில் இருந்து பெங்களூருக்குள் நுழையும் சாலையில் உள்ள சுங்கச்சாவடியில், நேற்று முதல் வாகனங்களுக்கு 5 ரூபாய் முதல், 165 ரூபாய் வரை கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது.

பராமரிப்பு, பழுதுபார்ப்பு, இயக்கம் தொடர்பான செலவுகள் அதிகரித்து வருகின்றன. இதையடுத்து, தேசிய நெடுஞ்சாலை ஆணையம், 2026 - 27ம் ஆண்டுக்கான சுங்க கட்டணத்தை திருத்தி அமைத்து அறிவித்தது.

இந்த அறிவிப்பு நேற்று முதல் துமகூரில் இருந்து பெங்களூரை இணைக்கும் நெலமங்களா சுங்கச்சாவடியில் அமலுக்கு வந்துள்ளது. இதன்படி, வாகன வகையை பொறுத்து, ஒரு வழி பயண கட்டணம் 5 ரூபாயில் இருந்து 165 ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது.

அதுபோல, ஒரு நாள் பயணம் அல்லது இரு வழி பயணத்துக்கு, 15 ரூபாயில் இருந்து 245 ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது. இதனால் பெங்களூரு - துமகூரு வழித்தடத்தில் தினமும் இயங்கும் கார்கள், இலகுரக வாகனங்கள், பஸ்கள், லாரிகள் உட்பட பல வாகனங்களின் உரிமையாளர்கள் கூடுதல் சுங்க கட்டணம் செலுத்த வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us