/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
காதலி குடும்பம் மிரட்டல் வங்கி ஊழியர் தற்கொலை
/
காதலி குடும்பம் மிரட்டல் வங்கி ஊழியர் தற்கொலை
ADDED : ஜூன் 12, 2025 11:07 PM
கார்வார்: காதலி குடும்பத்தினர் மிரட்டியதால், தனியார் வங்கி ஊழியர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
உத்தர கன்னடா மாவட்டம், சித்தாபுராவைச் சேர்ந்தவர் சந்தோஷ் கணபதி நாயக், 26. தனியார் வங்கியில் ஊழியராக வேலை செய்தார். இவருக்கும், சித்தாபுரா அருகே சன்னமவா கிராமத்தின், 22 வயது இளம்பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. காதல் விவகாரம் இளம்பெண் வீட்டிற்கு தெரிந்தது.
கடந்த 10ம் தேதி சந்தோஷ் வீட்டிற்கு சென்ற, காதலியின் குடும்பத்தினர், 'இனி எங்கள் வீட்டு பெண்ணை காதலிக்க கூடாது. காதலை தொடர்ந்தால் கொன்று விடுவோம்' என்று மிரட்டிவிட்டு சென்று உள்ளனர். மனம் உடைந்த சந்தோஷ் நேற்று முன்தினம் காலை வீட்டில் இருந்து வெளியேறினார். துடபகனு வனப்பகுதிக்கு சென்று மரத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நேற்று அவரது உடல் மீட்கப்பட்டது.