தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஸ்பெஷல்/பானுவாசர ஸ்பெஷல்/பானுவாரா ஸ்பெஷல்

பானுவாரா ஸ்பெஷல்

பானுவாரா ஸ்பெஷல்


ADDED : செப் 26, 2026 11:07 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 26, 2026 11:07 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

- நமது நிருபர் -

தத்தி நடக்கும் வயதில், சிறுவன் அரிய சாதனை செய்து, 'இன்டர்நேஷனல் புக் ஆப் ரெக்கார்டு' புத்தகத்தில், இடம் பிடித்துள்ளார். 'சூப்பர் டேலண்டெட் கிட்' என்ற பெருமை கிடைத்துள்ளது.

தட்சிண கன்னட மாவட்டம், மங்களூரில் வசிப்பவர் தீபக் ஷெட்டி. இவரது மனைவி வினுதா. தம்பதிக்கு ஒரு வயது ஒரு மாதம் வயதில், சார்விக் என்ற மகன் உள்ளார். இவர் எட்டு மாத குழந்தையாக இருந்த போதே, தன் துருதுருப்பான செயல்களால், அனைவரையும் ஈர்த்தார்.

உணவு ஊட்டும் போது, தரையில் இருந்து படிகளில் ஏற முயற்சித்தார். ஆரம்பத்தில் குழந்தை விழுந்து, காயமடையுமே என, பெற்றோர் பயந்தனர்.

அதன் பின், மகனிடம் உள்ள திறமையை தெரிந்து கொண்ட வினுதா, அதை ஊக்கப்படுத்த விரும்பினார். எந்த பிடிமானமும் இல்லாமல், முதல் மாடியில் இருந்து, மொட்டை மாடி வரை ஏறி இறங்குவதை வீடியோவில் பதிவு செய்தார். தற்போது சார்விக்குக்கு ஒரு வயது ஒரு மாதமாகிறது.

அவர் முதல் மாடியில் இருந்து, மேல் மாடி வரை. 40 படிகளை யாருடைய உதவியும் இல்லாமல், இரண்டு நிமிடம், 40 நொடிகளில் ஏறினார். இதை பெற்றோர் வீடியோவில் பதிவு செய்து, இன்டர்நேஷனல் ரெக்கார்டு நிறுவனத்திற்கு அனுப்பினர். இந்த வீடியோ மற்றும் ஆவணங்களை பரிசீலித்த அந்த நிறுவனத்தினர், சிறுவனின் சாதனையை அங்கீகரித்துள்ளனர்.

சார்விக்கின் உடல் திறனை பாராட்டிய நிறுவனம், அவருக்கு 'சூப்பர் டேலென்டடு கிட்' என்ற விருதும், பதக்கமும், சான்றிதழும் வழங்கி கவுரவித்தது.

இது குறித்து, சிறுவனின் தந்தை தீபக் ஷெட்டி கூறியதாவது:

சார்விக் எட்டு மாத குழந்தையாக இருந்த போதே, படிகளில் ஏற முயற்சித்தார். இவரது திறமையை மற்றவருக்கு அறிமுகம் செய்ய, நாங்கள் விரும்பினோம். அதன் பின், படிகளை ஏறுவதற்கு, அவரை ஊக்கப்படுத்தினோம். ஆரம்பத்தில் பயம் இருந்தது. ஆனால் என் மகன் சார்விக்கின் உற்சாகம், உடல்திறன் எங்களுக்கு தைரியத்தை அளித்தது.

எங்கள் மகனின் திறமைக்கு, சர்வதேச அங்கீகாரம், பதக்கம், சான்றிதழ் கிடைத்திருப்பது, எங்கள் குடும்பத்துக்கே பெருமை அளித்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us