/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
'கோ பால்ஸ்' இயக்கத்தின் இசை நிகழ்ச்சி நாட்டு மாடுகளை காக்க பெஜாவர் மடாதிபதி அழைப்பு
/
'கோ பால்ஸ்' இயக்கத்தின் இசை நிகழ்ச்சி நாட்டு மாடுகளை காக்க பெஜாவர் மடாதிபதி அழைப்பு
'கோ பால்ஸ்' இயக்கத்தின் இசை நிகழ்ச்சி நாட்டு மாடுகளை காக்க பெஜாவர் மடாதிபதி அழைப்பு
'கோ பால்ஸ்' இயக்கத்தின் இசை நிகழ்ச்சி நாட்டு மாடுகளை காக்க பெஜாவர் மடாதிபதி அழைப்பு
ADDED : ஆக 06, 2025 08:36 AM

பெங்களூரு : நாட்டு மாடுகளை வளர்ப்பதில் விழிப்புணர்வு ஏற்படுத்தும், 'கோ பால்ஸ்' அமைப்பு சார்பில், பெங்களூரு மல்லேஸ்வரம் சவுடய்யா மெம்மோரியல் அரங்கில், 11ம் ஆண்டாக, '7 ஜீஸ் பார் ஏ சக்சஸ்புல் லைப்' என்ற தலைப்பில், ஆன்மிகமும், இசையும் ஒருங்கிணைந்த, அரிய நிகழ்வு நடந்தது.
நாட்டு மாடுகளுக்கு கோ பூஜையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. நாட்டு மாடுகளின் முக்கியத்துவம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து பல தகவல்கள் அடங்கிய பலகைகள், பார்வையாளர்களை கவர்ந்தன.
விழாவை துவக்கி வைத்து, உடுப்பி பெஜாவர் மடாதிபதி ஸ்ரீ விஸ்வ பிரசன்ன தீர்த்த சுவாமிகள் பேசுகையில், ''கோமாதா நம் தாய். அவளது பாலை குடித்து வளர்ந்தோம். நந்திகள் நம் தந்தை. அவைகள் உழும் நிலத்தில் இருந்து நமக்கு உணவு, உடை, உரம் என அனைத்தும் தருகின்றன. நகரில் மாடுகளை வளர்க்க இயலாதவர்களுக்கு, மாடுகளை பராமரிக்கும் நபர்களை ஆதரிக்க வேண்டும்,'' என்றார்.
பின், நாட்டு பசுவின் பாரம்பரியம், கிராமிய வாழ்க்கை, பங்களிப்பு ஆகியவற்றை எடுத்துரைக்கும் வகையில் பெண்கள் இயற்றிய, 'பால-கோகதாம்ருதம்' மற்றும் 'கோகதாம்ருதம்' எனும் புத்தகங்கள் வெளியிடப்பட்டன.
அதன் பின், நாட்டு மாடுகளை வளர்க்கும் விவசாயிகளுக்கு, 'ஹீல் சாம்பியன் விருது'களை, பெஜாவர் மடாதிபதி வழங்கினார்.
இதை தொடர்ந்து, விசாகா ஹரி, 'செவன் ஜீஸ் பார் ஏ சக்சஸ்புல் லைப்' என்ற தலைப்பில் ஹரிகதா நிகழ்ச்சியை நடத்தினார்.
இந்நிகழ்வுக்கு, பல பகுதிகளில் இருந்தும் பார்வையாளர்கள் வந்திருந்தனர்.
இந்த இசை நிகழ்ச்சி, 'கோ பால்ஸ்' இயக்கத்தின் 'மியூசிக் 2 ஹீல்' முயற்சியின் ஒரு பகுதியாகும். விவசாயம், இயற்கை மருத்துவம் மற்றும் பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் இந்த இயக்கம், கடந்த 10 ஆண்டுகளாக பல்வேறு மாநிலங்களில், 1,000க்கும் மேற்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளது.