தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ பெங்களூரு - எர்ணாகுளம் ஓணம் பண்டிகை சிறப்பு ரயில்

 பெங்களூரு - எர்ணாகுளம் ஓணம் பண்டிகை சிறப்பு ரயில்

 பெங்களூரு - எர்ணாகுளம் ஓணம் பண்டிகை சிறப்பு ரயில்


ADDED : ஜூலை 21, 2026 09:53 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 21, 2026 09:53 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: 'ஓணம் பண்டிகையை ஒட்டி, எர்ணாகுளத்தில் இருந்து பெங்களூருக்கு, ஆக., 9 முதல், செப்., 7ம் தேதி வரை வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படும்' என, தென்மேற்கு ரயில்வே அறிவித்து உள்ளது.

அறிக்கையில் குறி ப்பிட்டு உள்ளதாவது:

ரயில் எண் 06147: எர்ணாகுளம் - எஸ்.எம்.வி.டி., பெங்களூரு வாராந்திர விரைவு சிறப்பு ரயில், ஆக., 9ம் தேதி முதல் செப்., 6ம் தேதி வரை எர்ணாகுளத்தில் இருந்து ஞாயிற்றுகிழமை தோறும் இரவு 11:10 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் மதியம் 12:45 மணிக்கு எஸ்.எம்.வி.டி., வந்தடையும்.

மறு மார்க்கத்தில், ஆக., 10ம் தேதி மு தல் செப்., 7ம் தேதி வரை தோறும் எஸ்.எம்.வி.டி., பெங்களூ ரு ரயில் நிலையத்தில் இருந்து திங்கட்கிழமை தோறும், மாலை 4:00 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 5:45 மணிக்கு எர்ணாகுளம் சென்றடையும்.

போத்தனுார் சந்திப்பு, திருப்பூர், ஈரோடு சந்திப்பு, சேலம் சந்திப்பு, குப்பம், பங்கார்பேட்டை சந்திப்பு, கே.ஆர்.,புரம் ரயில் நிலையங்களில் நின்று புறப்படும்.

இவ்வாறு அதில் குறிப்பிட்டு உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us