/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பெங்களூரு பழ மார்க்கெட்டால் 2,000 குடும்பத்துக்கு வாழ்வு
/
பெங்களூரு பழ மார்க்கெட்டால் 2,000 குடும்பத்துக்கு வாழ்வு
பெங்களூரு பழ மார்க்கெட்டால் 2,000 குடும்பத்துக்கு வாழ்வு
பெங்களூரு பழ மார்க்கெட்டால் 2,000 குடும்பத்துக்கு வாழ்வு
ADDED : மார் 16, 2025 11:32 PM

பெங்களூரு: ''பெங்களூரு பழ மார்க்கெட் 2,000 குடும்பங்களின் வாழ்வாதாரமாக உள்ளது,'' என்று, பழ மார்க்கெட் நிர்வாக கமிட்டி உறுப்பினர் முபாரக் பாஷா கூறினார்.
பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி, ஹுஸ்கூர் மெயின் ரோட்டில் பெங்களூரு பழ மார்க்கெட் உள்ளது.
இந்த மார்க்கெட் செயல்படும் விதம் குறித்து நமது நாளிதழுக்கு, பழ மார்க்கெட் நிர்வாக கமிட்டி உறுப்பினர் முபாரக் பாஷா எனும் பாபு அளித்த பேட்டி:
இந்த மார்க்கெட் 19 ஏக்கர் பரப்பளவு கொண்டது. ஏ முதல் ஐ வரை 9 வரிசையில் 381 கடைகள் உள்ளன. ஒவ்வொரு கடையிலும் குறைந்தது நான்கு முதல் ஐந்து பேர் வேலை செய்கின்றனர். 2,000 குடும்பங்களின் வாழ்வாதாரமாக திகழ்கிறது.
சீசனுக்கு ஏற்ப பழங்கள் வரத்து இருக்கும். தற்போது கோடை காலம் என்பதால் தர்பூசணி வரத்து அதிகமாக உள்ளது. வியாபாரம் விறுவிறுப்பாக நடக்கிறது.
தினமும் 65 டன் தர்பூசணி வருகிறது. காலை 4:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை மார்க்கெட் செயல்பாட்டில் இருக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை. தினமும் 300 லாரிகள் இங்கு வந்து செல்கின்றன.
கர்நாடக அரசின் வேளாண் விளைப்பொருட்கள் சந்தைப்படுத்துதல் துறையின் கீழ் இந்த மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. பெங்களூரில் உள்ள முக்கிய மார்க்கெட்டுகளுக்கு இங்கிருந்து தான் பழங்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன.
இங்கு மொத்த விற்பனை தான் நடக்கிறது. ஏலம் உட்பட சில நடைமுறையில் வியாபாரிகளுக்கு பழங்களை விற்பனை செய்கிறோம்.
பிற மாநிலங்களில் இருந்து இங்கு பழங்கள் வருகின்றன. இங்கிருந்து தமிழகம், கேரளா, ஆந்திராவுக்கும் பழங்கள் செல்கின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.