தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ பெங்களூரு - திருவனந்தபுரம் இன்று சிறப்பு ரயில் இயக்கம்

 பெங்களூரு - திருவனந்தபுரம் இன்று சிறப்பு ரயில் இயக்கம்

 பெங்களூரு - திருவனந்தபுரம் இன்று சிறப்பு ரயில் இயக்கம்


ADDED : ஆக 22, 2026 01:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 22, 2026 01:28 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: எஸ்.எம்.வி.டி., பெங்களூரு - திருவனந்தபுரம் வடக்கு இடையே இன்று சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

தென்மேற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

ஓணம் பண்டிகையை முன்னிட்டு, பயணியர் கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில், எஸ்.எம்.வி.டி., பெங்களூரு - திருவனந்தபுரம் வடக்கு இடையே சிறப்பு ரயில் 06575 இன்று இயக்கப்படுகிறது. மாலை 4:40 மணிக்கு எஸ்.எம்.வி.டி.,யில் இருந்து புறப்படும் ரயில், நாளை காலை 10:00 மணிக்கு திருவனந்தபுரம் வடக்கு ரயில் நிலையத்தை அடையும்.

மறுமார்க்கமாக நாளை மதியம் 12:30 மணிக்கு, திருவனந்தபுரம் வடக்கில் இருந்து புறப்படும் ரயில் 06576, நாளை மறுநாள் காலை 5:15 மணிக்கு, எஸ்.எம்.வி.டி., வரும்.

இதுபோல, வரும் 28ம் தேதி பெங்களூரு கன்டோன்மென்ட் - திருவனந்தபுரம் வடக்கு இடையே, சிறப்பு ரயில் 06579 இயக்கப்படுகிறது. அன்று மாலை 4:30 மணிக்கு புறப்படும் ரயில், மறுநாள் காலை 10:30 மணிக்கு திருவனந்தபு ரம் வடக்கு செல்லும்.

மறுமார்க்கமாக 29ம் தேதி மதியம், 12:30 மணிக்கு புறப்படும் ரயில், மறுநாள் காலை 5:15 மணிக்கு, கன்டோன்மெண்ட் வந்தடையும்.

கே.ஆர்.புரம், பங்காருபேட்டை, குப்பம், சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனுார், பாலக்காடு, திருச்சூர், ஆலுவா, எர்ணாகுளம் டவுன், கோட்டயம், சங்கனாசேரி, திருவல்லா, செங்கனுார், மாவேலிகரா, காயங்குளம், கருநாகப்பள்ளி, சாஸ்தான்கோட்டா, கொல்லம், வர்கலா சிவகிரி ரயில் நிலையங்களில் நிற்கும்.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us