தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ சிறுமி பாலியல் பலாத்காரம்; கடைக்காரருக்கு '5 ஆண்டு'

 சிறுமி பாலியல் பலாத்காரம்; கடைக்காரருக்கு '5 ஆண்டு'

 சிறுமி பாலியல் பலாத்காரம்; கடைக்காரருக்கு '5 ஆண்டு'


ADDED : ஆக 22, 2026 01:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 22, 2026 01:28 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மங்களூரு: சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த, இளநீர் கடைக்காரருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதித்து, மங்களூரு நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.

தட்சிண கன்னடா மாவட்டம், மங்களூரு நகரின் கடபா குத்மூர் கிராமத்தில் வசிப்பவர் அப்துல்லா, 64. இவர், இதே கிராமத்தில் இளநீர் கடை நடத்தினார். கடந்த, 2020 பிப்ரவரி 14ம் தேதியன்று, 10 வயது சிறுமி இளநீர் வாங்க, அப்துல்லாவின் கடைக்கு வந்தார்.

இளநீர் வாங்கிய அவர், பணம் கொடுத்தார். மீதி சில்லரை கொடுப்பதாக கூறி, சிறுமியை அப்துல்லா கடைக்குள் அழைத்து சென்று, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார். இதை யாரிடமாவது கூறினால் கொலை செய்வதாகவும் மிரட்டினார்.

ஆனால், சிறுமி தன் தாயிடம் நடந்ததை கூறினார். தாயும், உடனடியாக பெள்ளாரே போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசாரும் அப்துல்லாவை கைது செய்தனர். விசாரணையை முடித்து, மங்களூரின், 7வது கூடுதல் மாவட்ட, செஷன்ஸ் நீதிமன்றத்தில் போலீசார், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

விசாரணையில், அப்துல்லாவின் குற்றம் உறுதியானதால், அவருக்கு ஐந்தாண்டுகள் சிறை தண்டனை, 35,000 ரூபாய் அபராதம் விதித்து, நீதிபதி சுமங்களா நேற்று தீர்ப்பளித்தார். அபராதம் செலுத்த தவறினால், கூடுதலாக ஆறு மாதம் சிறை தண்டனை அனுபவிக்கும்படியும் உத்தரவிட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us