'கிரஹஜோத ி ' திட்டம் நிறுத்தப்படாது வாடகைதாரர்களுக்கு 'பெஸ்காம்' உறுதி
'கிரஹஜோத ி ' திட்டம் நிறுத்தப்படாது வாடகைதாரர்களுக்கு 'பெஸ்காம்' உறுதி
ADDED : ஜூலை 08, 2026 11:15 PM
பெங்களூரு: 'மாநில அரசின் கிரஹஜோதி திட்டத்தின் பயனாளிகள் குறித்து, ஆய்வு செய்யும் பணி நடக்கிறது. 'பெஸ்காம ் ' ஊழியர்கள் வீடு வீடாக சென்று, தகவல் பெறுகின்றனர். வாடகைதாரர்கள் கவலைப்படத் தேவையில்லை' என. பெஸ்காம் அறிவித்துள்ளது.
இது குறித்து, பெஸ்காம் வெளியிட்டுள்ள அறிக்கை:
கடந்த 2023ன் ஜூலையில், மாநில அரசின் முக்கிய திட்டங்களில் ஒன்றான, 'கிரஹஜோதி' திட்டம் செயல்படுத்தப்பட்டது. மூன்றாண்டுகள் நிறைவடைந்ததால், திட்டம் மறு பரிசீலனை செய்யப்படுகிறது.
இப்பணிகள் இம்மாதம் 1ம் தேதியன்று துவங்கின. பெஸ்காம் ஊழியர்கள் வீடு வீடாக சென்று, பயனாளிகளிடம் தகவல் பெறுகின்றனர்.
பெஸ்காம் மீட்டர் ரீடர்கள், ஊழியர்கள் பயனாளிகளின் வீடுகளில் ஆய்வு நடத்தும் போது, பழைய வாடகைதாரர்களின் ஆதார் விபரங்களை நீக்கி விட்டு, தற்போதுள்ள புதிய வாடகைதாரர்களின் ஆதார் விபரங்கள், 'அப்டேட ் ' செய்து கொள்வர். எனவே, கிரஹஜோதி திட்டம் நிறுத்தப்படும் என, புதிய வாடகைதாரர்கள் கவலைப்பட தேவையில்லை.
ஆதார் கார்டு, பயனாளியின் பாஸ்போர்ட் அளவுள்ள போட்டோ, வாக்காளர் அடையாள அட்டை, பான் கார்டு, வாடகை ஒப்பந்த பத்திரம், ரேஷன் கார்டுகளை ஆய்வுக்கு வரும் ஊழியர்களிடம் காட்ட வேண்டும். ஊழியர்கள், மீட்டர் ரீடர்களுக்கு பொது மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
கிரஹஜோதி பயனாளிகள், ஜாதி சான்றிதழ் காட்ட வேண்டும் என்பது கட்டாயம் அல்ல. அவர்கள் ஜாதியை பற்றி தெரிவிக்க விரும்பாவிடில், மொபைல் செயலியில் தகவல் கூற விரும்பவில்லை என்பதை, பதிவு செய்யலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
