ADDED : மே 16, 2026 11:59 PM

அ நிறம் | அளவு
தங்கவயல்: தங்கவயலின் கிராம சாலைகள் சீரமைப்புக்கு நேற்று கேசம்பள்ளியில் பூமி பூஜை நடந்தது.
கேசம்பள்ளி கிராமத்திலிருந்து மடிவாளா வழியாக பீரனகுப்பா, சல்திகானஹள்ளி, கம்பம்பள்ளி வரை செல்லும் சாலை மேம்படுத்தப்படுகிறது. இதற்கான பூமி பூஜை நேற்று நடந்தது.
இதில் பங்கேற்ற தங்கவயல் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரூபகலா பேசுகையில், ''இச்சாலை பல ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது. கனரக வாகனங்கள் அடிக்கடி செல்வதால், சாலைகள் சேதமடைகின்றன. 3.50 கி.மீ., துாரமுள்ள இந்த சாலை மிகவும் சேதமடைந்திருந்தது. இச்சாலையை சீரமைக்க வேண்டும் என்று இப்பகுதியினர் கோரிக்கை விடுத்திருந்தனர்.
''இதற்காக பொது ப்பணித் துறை மூலம், 5 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. நிர்ணயிக்கப்பட்ட காலத்துக்குள், சாலை பணிகளை முடிக்க வேண்டும்,'' என்றார்.
