/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
24ம் தேதிக்கு பைக் டாக்சி சேவை வழக்கு ஒத்திவைப்பு
/
24ம் தேதிக்கு பைக் டாக்சி சேவை வழக்கு ஒத்திவைப்பு
ADDED : ஜூன் 13, 2025 11:24 PM
பெங்களூரு: கர்நாடகாவில் பைக் டாக்சிகளுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரிய மனு மீதான விசாரணையை, வரும் 24ம் தேதிக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது.
கர்நாடகாவில் தனியார் பைக் டாக்சிகளுக்கு மாநில அரசு தடை விதித்திருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து, தனியார் பைக் டாக்சி நிறுவனங்கள், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தன. இம்மனுவை, ஒருநபர் அமர்வு நீதிபதி, தள்ளுபடி செய்தார்.
இதை எதிர்த்து, இரு நபர் அமர்வு முன்னிலையில், தனியார் நிறுவனங்கள் மேல்முறையீடு செய்திருந்தன. இம்மனு, இரு நீதிபதிகள் குமரேஸ்வர் ராவ், சீனிவாஸ் ஹரிஷ் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அரசு தரப்பு அட்வகேட் ஜெனரல் சஷி கிரண் ஷெட்டி வாதிடுகையில், ''இதற்கு அனுமதி அளித்தால், இந்த விதியின் கீழ், டிரக்கையும் கொண்டு வந்துவிடுவர். கடந்த ஐந்து ஆண்டுகளாக அனுமதியின்றி, இவர்கள் பைக் டாக்சியை இயக்கி வருகின்றனர்,'' என்றார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், 'ஒரு நபர் நீதிபதி அமர்வு அளித்த தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்க மறுத்ததுடன், விசாரணையை வரும் 24ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.