/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
போலீஸ் ஜீப் மோதி பைக்கில் சென்றவர் பலி
/
போலீஸ் ஜீப் மோதி பைக்கில் சென்றவர் பலி
ADDED : மே 06, 2025 05:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முல்பாகல்: முல்பாகல் காந்தராஜ் சதுக்கத்தில் நேற்று முன்தினம் இரவு பேத்தமங்களா அருகே உள்ள படமாக்கன ஹள்ளியைச் சேர்ந்த நாராயணசாமி, 45, என்பவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
இந்த இருசக்கர வாகனத்தின் மீது எதிரே வந்த போலீஸ் ஜீப் நேருக்கு நேர் மோதியது. இதில் நாராயண சாமி பலத்த காயமடைந்தார்.
உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆயினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.