/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கோடீஸ்வர திருநங்கை கொலை கணவர், வேலைக்காரி மாயம்
/
கோடீஸ்வர திருநங்கை கொலை கணவர், வேலைக்காரி மாயம்
ADDED : ஏப் 21, 2025 05:03 AM
கே.ஆர்புரம்: பல கோடி ரூபாய் சொத்துகளுக்கு உரிமையாளரான திருநங்கை, வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
பெங்களூரு, கே.ஆர்.புரத்தின், பசவேஸ்வர நகரின், காயத்ரி லே - அவுட்டில் வசித்தவர் திருநங்கை தனுஸ்ரீ, 40. இவர் கர்நாடக ரக்ஷனா வேதிகே அமைப்பில் உறுப்பினராக இருந்தவர்.
கடந்த மூன்று மாதங்களுக்கு முன், ஜெகந்நாத், 45, என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
சில நாட்களாக தனுஸ்ரீ, வீட்டில் இருந்து வெளியே வரவில்லை. இந்நிலையில் நேற்று காலை, இவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதை உணர்ந்த அக்கம், பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு வந்த கே.ஆர்.புரம் போலீசார், வீட்டுக்குள் சென்று பார்த்த போது, தனுஸ்ரீ கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரிந்தது.
இதையடுத்து உடலை மீட்ட போலீசார் விசாரணையை துவக்கி உள்ளனர். தனுஸ்ரீ கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துகளுக்கு சொந்தக்காரர். 'சங்கமா' என்ற பெயரில் என்.ஜி.ஓ., அமைப்பு நடத்தி, சமூக சேவைகள் செய்து வந்தார்.
இவரது கணவர் ஜெகந்நாத்தும், வீட்டில் வேலை செய்து வந்த பெண்ணும் தலைமறைவாகியுள்ளனர். சொத்துக்காக இவர்களே கொலை செய்திருக்கலாம் என, போலீசார் சந்தேகிக்கின்றனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

