sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

தசராவில் பங்கேற்கும் 9 யானைகளின் 'பயோடேட்டா'

/

தசராவில் பங்கேற்கும் 9 யானைகளின் 'பயோடேட்டா'

தசராவில் பங்கேற்கும் 9 யானைகளின் 'பயோடேட்டா'

தசராவில் பங்கேற்கும் 9 யானைகளின் 'பயோடேட்டா'


ADDED : ஆக 18, 2025 03:42 AM

Google News

ADDED : ஆக 18, 2025 03:42 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மைசூரு தசராவில் பங்கேற்க முதல்கட்டமாக வந்து உள்ள, அம்பாரி சுமக்கும் அபிமன்யு உட்பட 9 யானைகளின் 'பயோடேட்டா' பற்றி தகவல் வெளியாகி உள்ளது.

உலகப்புகழ் பெற்ற மைசூரு தசரா அடுத்த மாதம் 22 ம் தேதி துவங்கி, அக்டோபர் 2 ம் தேதி வரை 12 நாட்கள் நடக்க உள்ளது. விழாவின் சிகர நிகழ்ச்சியான கடைசி நாள் ஜம்பு சவாரி ஊர்வலம் நடக்கும். அன்றைய தினம் சாமுண்டீஸ்வரி அம்மன் வீற்றிருக்கும் 750 கிலோ எடை கொண்ட, தங்க அம்பாரியை சுமந்தபடி அபிமன்யு யானை செல்ல, அதனை பின்தொடர்ந்து 13 யானைகள் செல்லும்.

தசராவில் கலந்து கொள்வதற்காக அபிமன்யு, பீமா, தனஞ்ஜெயா, ஏகலவ்யா, மகேந்திரா, பிரசாந்த், கஞ்சன், லட்சுமி, காவேரி என ஒன்பது யானைகள் முதல்கட்டமாக மைசூருக்கு வந்து உள்ளது. அரண்மனை வளாகத்தில் தங்க வைக்கப்பட்டு உள்ளன. யானைகளுக்கு கடந்த 10 ம் தேதி உடல் எடை சரிபார்க்கப்பட்டது. ஒன்பது யானைகளும் நல்ல உடல்தகுதியுடன் இருப்பது தெரிந்து உள்ளது.

ஒன்பது யானைகளின் பயோடேட்டா பற்றிய குறிப்புகள்:

அபிமன்யு வயது : 59

எடை: 5,360 கிலோ

உயரம்: 2.72 மீட்டர்

அகலம்: 3.51 மீட்டர்

பாகன்: கே.எஸ்.வசந்த்

உதவியாளர்: ஜே.கே.ராஜு

வசிக்குமிடம்: மத்திகோடு யானைகள் முகாம்

பிடிபட்ட ஆண்டு, இடம்: 1970, ஹெப்பாலே வனப்பகுதி

சிறப்பு: அம்பாரியை சுமப்பது, காட்டு யானைகள், புலிகளை பிடிக்கும் பணிக்கு உதவுவது

*பீமா

வயது: 25

உடல் எடை: 5,465

உயரம்: 2.85 மீட்டர்

அகலம்: 3.05 மீட்டர்

பாகன்: குண்டா

உதவியாளர்: நஞ்சுண்ட சாமி

வசிக்குமிடம்: மத்திகோடு யானைகள் முகாம்

பிடிபட்ட ஆண்டு, இடம்: 2000, பீமனகட்டே

சிறப்பு: 2017 ம் ஆண்டில் இருந்து தசராவில் பங்கேற்பு.

தனஞ்ஜெயா வயது: 44

உடல் எடை: 5,310

உயரம்: 2.80 மீட்டர்

அகலம்: 3.84 மீட்டர்

பாகன்: ஜே.சி.பாஸ்கர்

உதவியாளர்: ஜே.எஸ்.ராஜண்ணா

வசிக்குமிடம்: துபாரே யானைகள் முகாம்

பிடிபட்ட ஆண்டு, இடம்: 2012, எசலுார்

சிறப்பு: 2018 ம் ஆண்டில் இருந்து தசராவில் பங்கேற்பு.

ஏகலவ்யா வயது: 40

உடல் எடை: 5,305

உயரம்: 2.85 மீட்டர்

அகலம்: 2.95 மீட்டர்

பாகன்: ஹிதாயத்

உதவியாளர்: சுருஜன்

வசிக்குமிடம்: தொட்டஅரவே யானைகள் முகாம்

பிடிபட்ட ஆண்டு, இடம்: 2022, மூடிகெரே.

சிறப்பு: 2023 ம் ஆண்டு முதல் தசராவில் பங்கேற்பு. சாந்தமான யானை, தைரியசாலி என்று பெயர் எடுத்து உள்ளது.

மகேந்திரா வயது: 42

உடல் எடை: 5,120

உயரம்: 2.75 மீட்டர்

அகலம்: 3.25 மீட்டர்

பாகன்: ராஜண்ணா

உதவியாளர்: மல்லிகார்ஜுன்

வசிக்குமிடம்: பள்ளே யானைகள் முகாம்

பிடிபட்ட ஆண்டு, இடம்: 2018, ராம்நகர்

சிறப்பு: 2022 ம் ஆண்டு முதல் தசராவில் பங்கேற்பு. அம்பாரியை சுமக்கும் தயாராகி வருகிறது. காட்டு யானை, புலி பிடிக்கும் பணிக்கும் பயன்படுத்தப்படுகிறது.

*பிரசாந்த் வயது: 53

உடல் எடை: 5,110

உயரம்: 2.61 மீட்டர்

அகலம்: 3.46 மீட்டர்

பாகன்: சின்னப்பா

உதவியாளர்: சந்திரா

வசிக்குமிடம்: துபாரே யானைகள் முகாம்

பிடிபட்ட ஆண்டு, இடம்: 1993, ஷிவமொக்கா

சிறப்பு: கடந்த 15 ஆண்டுகளாக தசராவில் பங்கேற்பு

கஞ்சன் வயது: 26

உடல் எடை: 4,880

உயரம்: 2.89 மீட்டர்

அகலம்: 3.05 மீட்டர்

பாகன்: விஜய்

உதவியாளர்: கிரண்

வசிக்குமிடம்: துபாரே யானைகள் முகாம்

பிடிபட்ட ஆண்டு, இடம்: 2014, எசலுார்

சிறப்பு: இரண்டு ஆண்டுகளாக தசராவில் பங்கேற்பு. பாகன் கட்டளையை உடனே கடைப்பிடிக்கும் யானை என்று பெயர் பெற்று உள்ளது.

லட்சுமி வயது: 54

உடல் எடை: 3,730

உயரம்: 2.52 மீட்டர்

அகலம்: 2.85 மீட்டர்

பாகன்: சன்னப்பா

உதவியாளர்: மஞ்சு

வசிக்குமிடம்: பள்ளே யானைகள் முகாம்

பிடிபட்ட ஆண்டு, இடம்: 2015, சர்க்கஸ் கம்பெனி

சிறப்பு: இரண்டு ஆண்டுகளாக தசராவில் பங்கேற்பு. மனிதர்களுடன் கொஞ்சி விளையாடுவது.

காவேரி வயது: 45

உடல் எடை: 3,010

உயரம்: 2.50 மீட்டர்

அகலம்: 3.32 மீட்டர்

பாகன்: டோபி

உதவியாளர்: சஞ்சன்

வசிக்குமிடம்: துபாரே யானைகள் முகாம்

பிடிபட்ட ஆண்டு, இடம்: 2009, அடிநாரூர் வனப்பகுதி, சோமவார்பேட்

சிறப்பு: பத்து ஆண்டுகளாக தசராவில் பங்கேற்பு. ஜம்பு சவாரி ஊர்வலத்தின் துணை யானை என்ற பெருமை.

இரண்டாவது கட்டமாக, ஐந்து யானைகள் மைசூருக்கு வர உள்ளது.

- நமது நிருபர் -

மைசூரு தசராவில் பங்கேற்க முதல்கட்டமாக வந்து உள்ள, அம்பாரி சுமக்கும் அபிமன்யு உட்பட 9 யானைகளின் 'பயோடேட்டா' பற்றி தகவல் வெளியாகி உள்ளது.

உலகப்புகழ் பெற்ற மைசூரு தசரா அடுத்த மாதம் 22 ம் தேதி துவங்கி, அக்டோபர் 2 ம் தேதி வரை 12 நாட்கள் நடக்க உள்ளது.

விழாவின் சிகர நிகழ்ச்சியான கடைசி நாள் ஜம்பு சவாரி ஊர்வலம் நடக்கும்.

அன்றைய தினம் சா முண்டீஸ்வரி அம்மன் வீற்றிருக்கும் 750 கிலோ எடை கொண்ட, தங்க அம்பாரியை சுமந்தபடி அபிமன்யு யானை செல்ல, அதனை பின்தொடர்ந்து 13 யானைகள் செல்லும்.

தசராவில் கலந்து கொள்வதற்காக அபிமன்யு, பீமா, தனஞ்ஜெயா, ஏகலவ்யா, மகேந்திரா, பிரசாந்த், கஞ்சன், லட்சுமி, காவேரி என ஒன்பது யானைகள் முதல்கட்டமாக மைசூருக்கு வந்து உள்ளது.

அரண்மனை வளாகத்தில் தங்க வைக்கப்பட்டு உள்ளன. யானைகளுக்கு கடந்த 10 ம் தேதி உடல் எடை சரிபார்க்கப்பட்டது.

ஒன்பது யானைகளும் நல்ல உடல்தகுதியுடன் இருப்பது தெரிந்து உள்ளது.

- நமது நிருபர் -






      Dinamalar
      Follow us