தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ பறவை காய்ச்சல் கொப்பாலில் பீதி

 பறவை காய்ச்சல் கொப்பாலில் பீதி

 பறவை காய்ச்சல் கொப்பாலில் பீதி


ADDED : ஆக 03, 2026 12:10 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 03, 2026 12:10 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கொப்பால்: கொப்பால் மாவட்டத்தில், நுாற்றுக்கணக்கான பறவைகள் திடீர், திடீரென இறக்கின்றன. இங்கு பறவை காய்ச்சல் பீதி ஏற்பட்டுள்ளது.

கொப்பால் மாநகராட்சி அலுவலகத்தின், பின் பகுதியில் உள்ள மரத்தில், கடந்த மூன்று மாதங்களாக ஆயிரக்கணக்கான பறவைகள் கூடு கட்டி, குஞ்சி பொறித்து வாழ்கின்றன.

கடந்த ஒரு வாரமாக, பறவைகள் திடீர் திடீரென இறந்து விழுகின்றன. இவை பறவை காய்ச்சலால் இறந்திருக்கலாம் என, அஞ்சப்படுகிறது. நுாற்றுக்கணக்கான பறவைகள் உடல் நிலை பாதிக்கப்பட்டு, பறக்க முடியாத நிலையில் உள்ளன. அப்பகுதியினர் தகவல் கூறியும், மாநகராட்சி அதிகாரிகளோ, கால் நடைத்துறை அதிகாரிகளோ அங்கு வரவில்லை.

இது குறித்து, சம்பந்தப்பட்ட துறைகளின் அதிகாரிகளிடம் ஊடகத்தினர் கேள்வி எழுப்பிய போது, 'நாங்கள் தற்போது எஸ்.ஐ.ஆர்., பணியில் மும்முரமாக இருக்கிறோம்' என பதில் அளித்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us