ADDED : ஆக 03, 2026 12:11 AM
அ நிறம் | அளவு
பெங்களூரு: கர்நாடகாவில் நடந்து வரும், எஸ்.ஐ.ஆர்., பணிகளை எளிதாக்கும் வகையில், வீடு வீடாக இலவச ஜாதி சான்றிதழ் வழங்க, மாநில அரசு முன் வந்துள்ளது.
இதுகுறித்து, வருவாய் துறை அதிகாரிகள் கூறியதாவது:
மத்திய தேர்தல் ஆணையம் சார்பில், கர்நாடகாவில் சிறப்பு வாக்காளர் பட்டியல் பரிசீலனை பணிகள், தீவிரமாக நடக்கின்றன. வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்க, தேர்தல் ஆணையம் கூறியுள்ள, 11 ஆவணங்களை, பொதுமக்கள் வழங்க வேண்டியிருக்கும். இவற்றில் ஜாதி சான்றிதழும் ஒன்றாகும்.
இந்த சான்றிதழை இலவசமாக வழங்க, அரசு முடிவு செய்துள்ளது. அரசு ஆவணங்களில் உள்ள மொபைல் எண்களுக்கு, டவுன் லோட் லிங், எஸ்.எம்.எஸ்., மற்றும் வாட்ஸாப் மூலம் அனுப்பப்படும்.
இவ்வாறு, 4.81 கோடிக்கும் மேற்பட்ட இலவச ஜாதி சான்றிதழ் வழங்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
