/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பா.ஜ., - எம்.எல்.ஏ., மகன் மீது பலாத்கார புகார் பெண்ணை பெங்களூரு அழைத்து வந்து விசாரணை
/
பா.ஜ., - எம்.எல்.ஏ., மகன் மீது பலாத்கார புகார் பெண்ணை பெங்களூரு அழைத்து வந்து விசாரணை
பா.ஜ., - எம்.எல்.ஏ., மகன் மீது பலாத்கார புகார் பெண்ணை பெங்களூரு அழைத்து வந்து விசாரணை
பா.ஜ., - எம்.எல்.ஏ., மகன் மீது பலாத்கார புகார் பெண்ணை பெங்களூரு அழைத்து வந்து விசாரணை
ADDED : ஜூலை 27, 2025 05:06 AM
பெங்களூரு: அவுராத் பா.ஜ., - எம்.எல்.ஏ., பிரபு சவுஹான் மகன் பிரதீக் மீது பலாத்கார புகார் அளித்த இளம்பெண்ணை, பெங்களூரில் உள்ள ஹோட்டலுக்கு அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தினர்.
பீதர் அவுராத் பா.ஜ., - எம்.எல்.ஏ., பிரபு சவுஹான். இவரது மகன் பிரதீக், 27. இவருக்கும், மஹாராஷ்டிராவின் நந்தேட் தாலுகா தெக்லுார் கிராமத்தின் 25 வயது இளம்பெண்ணுக்கும், 2023ம் ஆண்டு டிசம்பரில் திருமண நிச்சயம் செய்யப்பட்டது. பின், சில காரணங்களுக்காக திருமணம் ரத்து செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து, கடந்த 19ம் தேதி பிரதீக் மீது, கர்நாடக மகளிர் ஆணையத்தில் இளம்பெண் புகார் செய்தார். 'திருமண நிச்சயத்திற்கு பின் ஷிருடி, பெங்களூரு, லாத்துாருக்கு பிரதீக் என்னை அழைத்துச் சென்றார். லாட்ஜில் வைத்து என்னை பலாத்காரம் செய்தார்' என்று கூறி இருந்தார்.
இளம்பெண் அளித்த புகார், பீதர் எஸ்.பி., அலுவலகத்திற்கு மாற்றப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில் பிரதீக் மீது, பீதர் மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து அவர் தலைமறைவாகிவிட்டார்.
இவ்வழக்கில் எம்.எல்.ஏ., பிரபு சவுஹான் மீதும் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என, இளம்பெண்ணின் தாய் போலீசில் புகார் செய்துள்ளார்.
இந்நிலையில் இளம்பெண்ணை, பீதர் போலீசார் நேற்று பெங்களூரு அழைத்து வந்தனர். பிரதீக்குடன் தங்கி இருந்ததாக கூறிய, மெஜஸ்டிக் பகுதியில் உள்ள தனியார் சொகுசு ஹோட்டலுக்கு அறைக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.
அந்த இளம்பெண் ஊடகத்தினரிடம் கூறுகையில், ''திருமண நிச்சயம் முடிந்துவிட்டதால், நீ தான் என் வருங்கால மனைவி என்று கூறி, பிரதீக் என்னை பல இடங்களுக்கு சுற்றுலா அழைத்துச் சென்றார்.
' 'பெங்களூருக்கு வந்து சொகுசு ஹோட்டலில் அறை எடுத்துத் தங்கினோம். அங்கு வைத்து என்னை பலாத்காரம் செய்தார். பிரதீக்கின் தந்தை பிரபு சவுஹான் எம்.எல்.ஏ., என்பதால், அவரது தரப்பில் இருந்து வழக்கை வாபஸ் பெற எங்களுக்கு நெருக்கடி வருகிறது. எங்களுக்கு நியாயம் கிடைக்க, முதல்வர் சித்தராமையா உதவ வேண்டும்,'' என்றார்.

