/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
'நிடி ஆயோக்' கூட்டம் புறக்கணிப்பு சித்தராமையா மீது பா.ஜ., பாய்ச்சல்
/
'நிடி ஆயோக்' கூட்டம் புறக்கணிப்பு சித்தராமையா மீது பா.ஜ., பாய்ச்சல்
'நிடி ஆயோக்' கூட்டம் புறக்கணிப்பு சித்தராமையா மீது பா.ஜ., பாய்ச்சல்
'நிடி ஆயோக்' கூட்டம் புறக்கணிப்பு சித்தராமையா மீது பா.ஜ., பாய்ச்சல்
ADDED : மே 26, 2025 12:22 AM

பெங்களூரு : மாநில வளர்ச்சிக்கு முக்கியமான 'நிடி ஆயோக்' கூட்டத்தில் முதல்வர் சித்தராமையா கலந்து கொள்ளாதது, பா.ஜ., உள்ளிட்ட எதிர்க்கட்சியினரை ஆத்திரத்தில் ஆழ்த்தி உள்ளது. மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா முதல்வரை கடுமையாக சாடியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஆண்டுக்கு ஒரு முறை மாநிலங்களுக்குரிய நிதி பங்கீட்டை நிர்ணயம் செய்யும், 'நிடி ஆயோக்' கூட்டம் நேற்று முன்தினம் புதுடில்லியில் நடந்தது. இதில், பல மாநிலங்களின் முதல்வர்கள் கலந்து கொண்டு, தங்கள் மாநிலத்தின் வளர்ச்சி குறித்து எடுத்துரைத்து, நிலுவையில் உள்ள நிதி தொகையை விடுவிக்குமாறு கோரிக்கை வைத்தனர்.
ஆனால், முதல்வர் சித்தராமையா நிடி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. முதல்வருக்கு மைசூரில் முக்கிய வேலைகள் உள்ளதால், அவரால் நிடி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க முடியாது. ஆனால், அவரது உரை அனுப்பப்பட்டு உள்ளதாக அரசு தரப்பில் கூறப்பட்டது.
இது குறித்து, மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா கூறியதவாது:
மாநிலத்தின் வளர்ச்சிக்கு முக்கியமான நிடி ஆயோக் கூட்டத்திற்கு முதல்வர் வேண்டுமென்றே பங்கேற்கவில்லை. சித்தராமையா தன் நாற்காலியின் மீதே கவனம் செலுத்தி வருகிறார். அவர் காங்கிரஸ் மேலிடத்தை திருப்திபடுத்துவதில் கவனமாக உள்ளார்.
காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் உள்ள தெலங்கானா, ஹிமாச்சல பிரதேசம், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களின் முதல்வர்கள் கூட்டத்தில் பங்கேற்று உள்ளனர். ஆனால், முதல்வர் சித்தராமையா மட்டும் செல்லவில்லை.
டில்லியில் சென்று போராட்டம் நடத்திய காங்கிரஸ் தலைவரால், தற்போது டில்லிக்கு செல்ல முடியவில்லையா? இது வெறும் அரசியல் மட்டுமல்ல. மாறாக, மாநிலத்தின் எதிர்காலம் சம்பந்தப்பட்டது. சித்தராமையா மாநிலத்தின் முன்னேற்றத்தை விட, அரசியலையே முதன்மையாக கருதுகிறார்.
இவ்வாறு கூறினார்.
மத்திய கனரக தொழில் துறை அமைச்சர் குமாரசாமி வெளியிட்ட அறிக்கையில், 'அரசியல் கவுரவத்திற்காக மாநிலத்தை பலிகடா ஆக்குவது தவறு.
மாநில வளர்ச்சியில் அரசியல் செய்ய வேண்டாம். மாநில வளர்ச்சி குறித்த முக்கியமான கூட்டத்தில், முதல்வர் கட்டாயம் கலந்து கொண்டிருக்க வேண்டும்.
14 பட்ஜெட்டுகளை தாக்கல் செய்த முதல்வர், நிடி ஆயோக் கூட்டதில் பங்கேற்காதது எந்த விதத்தில் சரி? பெங்களூரில் அமர்ந்து கொண்டு மத்திய அரசை விமர்சிப்பதில் பலனில்லை' என தெரிவித்துள்ளார்.