/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சுயேச்சை எம்.எல்.சி., லகனுக்கு பா.ஜ., அதிருப்தி அணி வலை
/
சுயேச்சை எம்.எல்.சி., லகனுக்கு பா.ஜ., அதிருப்தி அணி வலை
சுயேச்சை எம்.எல்.சி., லகனுக்கு பா.ஜ., அதிருப்தி அணி வலை
சுயேச்சை எம்.எல்.சி., லகனுக்கு பா.ஜ., அதிருப்தி அணி வலை
ADDED : ஜூலை 09, 2025 07:33 AM

பெலகாவி : கர்நாடக பா.ஜ., தலைவராக உள்ள விஜயேந்திராவுக்கு எதிராக, கட்சியில் இருந்து நீக்கப்பட்ட எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் எத்னால் தலைமையில், ஒரு அணி உருவானது.
அந்த அணியில் எம்.எல்.ஏ.,க்கள் ரமேஷ் ஜார்கிஹோளி, ஹரிஷ், முன்னாள் அமைச்சர்கள் குமார் பங்காரப்பா, அரவிந்த் லிம்பாவளி, முன்னாள் எம்.பி.,க்கள் சித்தேஸ்வர், பிரதாப் சிம்ஹா ஆகிய தலைவர்கள் உள்ளனர்.
விஜயேந்திராவை, எப்படியாவது தலைவர் பதவியில் இருந்து இறக்கி விடும் நோக்கத்தில், இந்த குழுவினர், மும்முரமாக வேலை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் பெலகாவியின் கோகாக்கில் நடக்கும், லட்சுமிதேவி திருவிழாவில் கலந்து கொள்ள, பா.ஜ., அதிருப்தி அணி நேற்று முன்தினம் கோகாக் சென்றது.
ரமேஷ் ஜார்கிஹோளி வீட்டில் சிறிது நேரம் ஆலோசனை நடத்திவிட்டு திடீரென, சுயேச்சை எம்.எல்.சி., லகன் ஜார்கிஹோளி வீட்டிற்கு அதிருப்தி அணியினர் சென்றனர். 'எங்கள் அணியில், நீங்களும் இணைய வேண்டும்' என்று அழைப்பு விடுத்தனர். ''நான் எந்த கட்சியையும் சாராத நபர். எதிர்காலத்தில் உங்களுக்கு ஆதரவு தருவது பற்றி பார்க்கலாம்,'' என, சிரித்து கொண்டே லகன் கூறினார்.
லகன், ரமேஷ் ஜார்கிஹோளியின் 3வது தம்பி என்பது குறிப்பிடத்தக்கது.
அதன்பின், முன்னாள் எம்.பி., சித்தேஸ்வரின் பிறந்த நாளை முன்னிட்டு, தாவணகெரேயில் உள்ள அவரது வீட்டிற்கு அதிருப்தி அணியினர் சென்றனர். பிறந்தநாள் வாழ்த்து கூறிவிட்டு, தங்களது அடுத்த கட்ட நடவடிக்கை குறித்தும் விவாதித்தனர்.