/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மின் துறை அமைச்சர் ஜார்ஜ் மீது லோக் ஆயுக்தாவில் பா.ஜ., புகார்
/
மின் துறை அமைச்சர் ஜார்ஜ் மீது லோக் ஆயுக்தாவில் பா.ஜ., புகார்
மின் துறை அமைச்சர் ஜார்ஜ் மீது லோக் ஆயுக்தாவில் பா.ஜ., புகார்
மின் துறை அமைச்சர் ஜார்ஜ் மீது லோக் ஆயுக்தாவில் பா.ஜ., புகார்
ADDED : ஏப் 22, 2025 05:11 AM

பெங்களூரு: மின் துறை அமைச்சர் ஜார்ஜ் மற்றும் பெஸ்காம் அதிகாரிகள் மீது பா.ஜ.,வினர் லோக் ஆயுக்தாவில் புகார் செய்துள்ளனர்.
பெங்களூரு, பெங்களூரு ரூரல், சிக்கபல்லாபூர், கோலார், தாவணகெரே, துமகூரு, சித்ரதுர்கா, ராம்நகர் ஆகிய எட்டு மாவட்டங்களுக்கு பெஸ்காம் எனும் பெங்களூரு மின்விநியோக கழகம் மின் பகிர்மானம் செய்து வருகிறது.
இப்பகுதியில் உள்ள வீடுகள், கடைகள், கட்டடங்களில் பயன்படுத்தப்படும் மின்சாரத்தின் அளவை துல்லியமாக கணக்கிட்டு, அதற்கான தொகையை மின்சாரம் வழங்கும் நிறுவனத்திற்கு அனுப்பும் கருவி தான் 'ஸ்மார்ட் மீட்டர்' எனப்படுகிறது.
இதை, அனைத்து வீடுகளிலும் கட்டாயம் பொருத்த வேண்டும் என பிப்ரவரி 15ம் தேதி பெஸ்காம் அறிவித்திருந்தது. இந்த மீட்டரின் விலை 4,998 ரூபாய் என அறிவிக்கப்பட்டது. இதற்கு பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
ஸ்மார்ட் மீட்டர் டெண்டரில் 15,568 கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக பா.ஜ., மூத்த எம்.எல்.ஏ., அஸ்வத் நாராயணன் குற்றஞ்சாட்டி இருந்தார்.
இதுதொடர்பாக, பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் அஸ்வத் நாராயணன், தீரஜ் முனிராஜ் ஆகியோர் நேற்று லோக் ஆயுக்தா அலுவலகத்திற்கு சென்று, மின்துறை அமைச்சர் ஜார்ஜ், முதன்மை செயலர் கவுரவ் குப்தா, பெஸ்காம் இயக்குனர் மஹந்தேஷ், தொழில்நுட்ப இயக்குனர்கள் ரமேஷ், பாலாஜி உட்பட சிலர் மீது புகார் அளித்தனர்.
இதன் பின், அஸ்வத் நாராயணன் அளித்த பேட்டி:
அனைத்து வீடுகளிலும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்த வேண்டும் என்று சட்டத்தில் கூறவில்லை. ஆனால், சட்டத்தை மீறி கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இதற்கான டெண்டரை, கருப்பு பட்டியலில் உள்ள நிறுவனத்துக்கு வழங்கி உள்ளனர். இதன் மூலம் மின் துறை அமைச்சர் ஜார்ஜ் சட்டத்தை மீறி உள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.