/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பா.ஜ.,வுக்கு வேலையே இல்லை! துணை முதல்வர் சிவகுமார் 'நக்கல்'
/
பா.ஜ.,வுக்கு வேலையே இல்லை! துணை முதல்வர் சிவகுமார் 'நக்கல்'
பா.ஜ.,வுக்கு வேலையே இல்லை! துணை முதல்வர் சிவகுமார் 'நக்கல்'
பா.ஜ.,வுக்கு வேலையே இல்லை! துணை முதல்வர் சிவகுமார் 'நக்கல்'
ADDED : பிப் 18, 2025 05:48 AM
பெங்களூரு: ''பா.ஜ.,வினருக்கு விமர்சனம் செய்வதை தவிர வேறு வேலை எதுவும் இல்லை,'' என, துணை முதல்வர் சிவகுமார் நக்கலடித்து உள்ளார்.
பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
'பெங்களூரில் ஒயிட் டாப்பிங் பணிகள் நடக்கும் இடங்களுக்கு சென்று, காங்கிரஸ் தலைவர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டு பப்ளிசிட்டி செய்கின்றனர்' என, எதிர்க்கட்சித் தலைவர் அசோக் விமர்சனம் செய்துள்ளார். பா.ஜ., ஆட்சி நடக்கும்போது, இதைத்தான் அவர்கள் செய்தனரா; காரில் அமர்ந்து கொண்டே அசோக், போட்டோ ஷூட் நடத்தினாரா?
பா.ஜ.,விற்கும், அக்கட்சி தலைவர்களுக்கும் விமர்சனம் செய்வதை தவிர வேறு வேலை எதுவும் இல்லை. எங்கள் கடமையை நாங்கள் செய்கிறோம். ஒயிட் டாப்பிங் பணிகள் 150 கி.மீ., துாரம் நடக்கின்றன. இதற்கு 1,700 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற திட்டங்களை எதிர்காலத்திலும் மேற்கொள்ள உள்ளோம்.
பெங்களூரில் சாலைகளை மேம்படுத்த, 600 கோடி ரூபாயில் திட்டம் துவங்கப்பட்டுள்ளது. இங்கு போக்குவரத்துத் திட்டங்கள் குறித்து ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், சில ஆலோசனைகளை கூறி உள்ளார். மேற்கொண்டு எந்த தகவலும் இதுவரை கிடைக்கவில்லை. நல்ல ஆலோசனைகளை அவர் வழங்கி இருந்தால், கட்டாயம் ஏற்போம்.
மூன்று மாதங்களாக 'அன்ன பாக்யா' அரிசி பணம், 'கிரஹலட்சுமி' பணம் சிலருக்கு வரவில்லை. ஆனால், இது விரைவில் சரி செய்யப்படும். எங்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம். அமைச்சர் ராஜண்ணா குறித்து எதுவும் பேசப்போவதில்லை. கேரளா சென்று திரும்பி வந்த பின், இவ்விஷயம் குறித்து பேசுகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.