தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/அரசுக்கு எதிராக போராட்டம் பா.ஜ., தலைவர்கள் கைது

அரசுக்கு எதிராக போராட்டம் பா.ஜ., தலைவர்கள் கைது

அரசுக்கு எதிராக போராட்டம் பா.ஜ., தலைவர்கள் கைது


UPDATED : நவ 12, 2026 12:00 AM

ADDED : நவ 11, 2026 11:28 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 12, 2026 12:00 AM ADDED : நவ 11, 2026 11:28 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: விலைவாசி உயர்வை கண்டித்து, அரசுக்கு எதிராக, பெங்களூரில் போராட்டம் நடத்திய பா.ஜ., தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.

கர்நாடகாவில் அத்தியாவசிய பொருட்கள் மீதான விலையை, காங்கிரஸ் அரசு தொடர்ந்து உயர்த்தி வருகிறது. இதற்கு உயர் நீதிமன்றமும் அதிருப்தி தெரிவித்த நிலையில், விலைவாசி உயர்வுக்கு எதிராகவும், அரசை கண்டித்தும் பெங்களூரு சுதந்திர பூங்காவில், பா.ஜ., சார்பில் நேற்று போராட்டம் நடந்தது.

விஜயேந்திரா தலைமையில் நடந்த போராட்டத்தில் முன்னாள் முதல்வர் எடியூரப்பா, கட்சியின் மூத்த தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள், மகளிர் அணியினர் பங்கேற்றனர். அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.

விஜயேந்திரா பேசுகையில், ‘‘சாமானிய மக்களை பற்றி கவலைப்படாமல், அத்தியாவசிய பொருட்கள் விலையை அரசு உயர்த்துகிறது. விவசாயிகளை பிச்சைக்காரர்கள் போன்று நடத்துகின்றனர்.

‘‘எப்போது ஆட்சி முடியும். இவர்களை வீட்டிற்கு அனுப்பலாம் என்று காத்து கிடக்கின்றனர்,’’ என்றார்.

போராட்டம் நடந்து கொண்டிருந்த போதே அரசுக்கு எதிராக, பா.ஜ., தலைவர்கள் சாலையில் இறங்கி போராடினர். இரும்பு தடுப்பு கம்பிகள் மீது ஏறினர். போலீசார் தடுக்க முயன்றதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதையடுத்து விஜயேந்திரா, எதிர்க்கட்சி தலைவர் அசோக், எம்.எல்.சி., ரவி உள்ளிட்ட தலைவர்கள், தொண்டர்கள் கைது செய்யப்பட்டு பஸ்களில் ஏற்றப்பட்டனர். சிறிது நேரத்தில் அனைவரும் விடுவிக்கப் பட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us